எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 23- மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மாதங்க ளுக்கு முன் 8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கிய இருவருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

12 வயதுக்கு உள்பட்ட சிறு மிகளை பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்குவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் இந்திய தண்டனையியல் சட்டத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 376டிபி' பிரிவின்கீழ் நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை அளித் துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விவரம் வருமாறு: மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சவுர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி பள்ளி முடிந்து, தனது தந்தைக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த பையு (20), ஆசிஃப் (24) ஆகிய இரு இளைஞர்கள், சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். மேலும், சிறுமி யின் கழுத்தை அறுத்து, கொலை செய்யவும் முயன்றுள்ளனர். உடல் முழுவதும் பலத்த காயமடைந்த சிறுமி, இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, இரு இளை ஞர்களும் கைது செய்யப்பட் டனர். அவர்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக் குப் பதிவு செய்யப்பட்டது. மந்த்சவுரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் செவ் வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப் பட்டது. இந்திய தண்டனையியல் சட்டத்தில் புதிதாக அறி முகப்படுத்தப்பட்ட 376டிபி' பிரிவின்கீழ் இருவரையும் குற் றவாளிகளாக அறிவித்த நீதிபதி நிஷா குப்தா, அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்ததை அடுத்து, 12 வயதுக்குள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினால், மரண தண் டனை விதிப்பதற்குரிய சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன் றத்தில் அண்மையில் நிறை வேற்றப்பட்டது. இந்த மசோ தாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். அதன்படி, 12 வயதுக்குள்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொ டுமை வழக்குகளில் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்க முடியும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner