எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

புதுடில்லி, ஆக. 23- எம்எல்ஏ, எம்.பி.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்கள் குறித்த விவரங் களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் மக்கள் பிரதிநிதிகளின் வேட்பு மனு விவரங்களை ஆய்வு செய் ததில் அவர்களில் 1,581 பேர் மீது சுமார் 13,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. போதிய நீதிபதி கள் மற்றும் நீதிமன்றங்கள் இல்லாத காரணத்தால் அவை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், இந்த விவ காரம் தொடர்பாக சமூக ஆர் வலர் அஸ்வினி குமார் உபாத் யாய என்பவர் உச்ச நீதிமன்றத் தில் மனு ஒன்றை தாக்கல் செய் தார். குற்றவாளியாக அறிவிக் கப்படும் நபர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், வேட்பா ளர்களுக்கு குறைந்தபட்ச கல் வித் தகுதி நிர்ணயிக்க வேண் டும் என்றும் அவர் வலியுறுத்தி யிருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்றத் தில் கடந்த ஆண்டு விசார ணைக்கு வந்தபோது, எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண் டும் என நீதிபதிகள் ஆலோ சனை வழங்கினர். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

அதன் அடிப்படையில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப் பதாக மத்திய அரசு உத்தரவா தம் அளித்தது. மேலும், அதற் காக முதல்கட்டமாக சுமார் ரூ.7.80 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளதாகவும் தெரிவித் தது.

அதன் தொடர்ச்சியாக அவற்றில் 10 நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கியுள்ள தாக சட்ட அமைச்சகம் தகவல் வெளியிட்டது. தமிழகம், உத் தரப் பிரதேசத்தில் அமைக்கப் பட்டு வரும் சிறப்பு நீதிமன்றங் கள் விரைவில் செயல்படத் தொடங்கும் எனவும் தெரிவிக் கப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப் போது வாத, பிரதி வாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது:

மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றங்கள் குறித்த விவரங்களைத் தெரியப்படுத்து வது அவசியம். அவற்றில் எத் தனை அமர்வு நீதிமன்றங்கள்? எத்தனை மாஜிஸ்திரேட் நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டுள் ளன? என்பன தொடர்பான தக வல்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தப் படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மனு மீதான விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner