எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.24 இந்திய விவசாயிகளின் வசமிருக்கும் சராசரி நிலத்தின் அளவு குறைந் துள்ளதாக, வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

2015- - 2016ஆம் ஆண்டுக்கு உரிய இந்த ஆய்வில், இந்திய விவசாயிகளிடம் சராசரியாக 1.1 ஹெக் டேர் நிலம் உள்ளது; ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை எடுத்துக் கொண்டால் 1.16 ஹெக்டேர் அளவிற்கு விவசாயிகளிடம் நிலமிருந்தது; இப் போது மூன்றில் ஒரு பங்கு விவசாயிகளிடம் 1 ஹெக்டே ருக்கும் குறைவான நிலம் மட்டுமே இருக்கிறது என்று நபார்டு தெரிவித்துள்ளது.37 சதவிகித விவசாயக் குடும்பங் களிடம் 0.4 ஹெக்டேருக்குக் குறைவான நிலமும், 30 சதவிகிதத்தினரிடம் 0.41 ஹெக் டேர் முதல் 1 ஹெக்டேர் வரையிலான நிலமும் இருக்கிறது. 13 சதவிகித விவசாயிகளிடம் மட்டுமே 2 ஹெக்டே ருக்கு அதிக மான விவசாய நிலம் இருக்கிறது; மாநில வாரியாகப் பார்த்தால், நாகாலாந்து மாநில விவசாயிக ளிடம் சராசரியாக 2.1 ஹெக்டேர் நிலமும், ராஜஸ்தான் மாநிலத்தில் 1.9 ஹெக்டேர் நிலமும், அரியானா மாநிலத்தில் 1.7 ஹெக்டேர் நிலமும் விவசாயிகள் வசமிருக்கிறது என்று நபார் டின் ஆய் வறிக்கை தெரிவிக்கிறது.

விவசாயத்துக்குத் தேவை யான உபகரணங்களைப் பொறுத்தவரையில்- 5.2 சதவிகித விவசாயக் குடும்பங்களிடம் மட்டுமே டிராக்டர்கள் இருக் கின்றன; அதேபோல 1.8 சதவிகித விவசாயிகளிடம் மட்டுமே பவர் டிரில்லர்கள் இருக்கின்றன; 1.6 சதவிகிதத்தினரிடம் மட்டுமே நீர்ப் பாசன வசதிக்கான கருவிகள் இருக்கின்றன; 0.8 சதவிகிதத் தினரிடம் மட்டுமே நீர்த் தெளிப் பான் கருவிகள் இருக்கின்றன என்றும் நபார்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner