எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.24 திருமணம், வரதட்சிணைக் கொடுமையால் மரணம் ஆகியவை தொடர்பான வழக்குகளில் தேவையின்றி உறவினர்களின் பெயர்களை சேர்க்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கீழமை நீதிமன்றம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கணவன் -மனைவி இடையேயான பிரச்சினை ஒன்றில், கணவரின் தாய்மாமன்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. மனைவியை உளவில் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத் தும் கணவருக்கு ஆதரவாக அவரது தாய்மாமன் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கணவரின் தாய்மாமன்கள், அய்தராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அவர் களின் மனுவை, அய்தராபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிராகரித்து விட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு, நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, எல்.நாகேஸ் வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (22.8.2018) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: திருமணம், வரதட்சிணைக் கொடுமை மரணங்கள் ஆகியவை தொடர்பான பிரச்சினைகளில், கணவரின் தூரத்து உறவினர்கள் நேரடியாக ஈடுபட்டிருந்தால் மட்டுமே அவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும். வழக்கு தொடர்பாக, காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, அதை நீதிமன்றம் கவனமாக பரிசீலிக்க வேண்டும். அதன் பிறகு, மனைவியை கொடுமைப்படுத்தியது, சதித் திட்டம் தீட்டியது, கடத்தியது போன்ற கொடுஞ்செயல்களில் கணவரின் உறவினர்கள் ஈடுபட்டதற்கான முகாந்திரம் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகே அவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும். முகாந்திரம் இல்லாமல், தேவையின்றி ஒட்டு மொத்தமாக கணவரின் உறவினர்களின் பெயர்களை சேர்க்கக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner