எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோரும் உச்ச நீதிமன்றம்

புதுடில்லி, ஆக. 24- மத்திய பிர தேசம், ராஜஸ்தானில் வாக்கா ளர் பட்டியலில் போலியாக 60 லட்சம் பெயர்கள் இடம் பெற் றுள்ளது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர் தல் ஆணையத்துக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ் தானில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இந்த இரு மாநிலங்களிலும் ஏராள மான போலி வாக்காளர்கள் உள்ளதாகவும், அவற்றை நீக்க வேண்டும் என்றும் காங்கிரசு தலைவர்கள் கமல்நாத், சச்சின் பைலட் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மத் திய பிரதேச தேர்தலில் பயன் படுத்தப்பட உள்ள வாக்களிப்பு உறுதி சான்று வழங்கும் இயந் திரத்தை (விவிபிஏடி) ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பாக அவர்கள் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விசா ரணைக்கு வந்தது.  வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, மற்றும் அசோக்பூஷன் ஆகியோர் விசா ரித்தனர். அப்போது கமல்நாத் மற்றும் பைலட் சார்பில் வழக் குரைஞர் ஏ.எம்.சிங்வி ஆஜ ராகி வாதிட்டார். இதன்பின்னர், மத்திய தேர்தல் ஆணையம் மற்றும் 2 மாநிலங்களை சேர்ந்த தேர்தல் ஆணையத்துக்கும் விளக் கம் கேட்டு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner