எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 26- நாடாளு மன்ற தேர்தலை சந்திக்க காங் கிரஸ் முழுவீச்சில் தயாராகி உள்ளது. இதற்காக கட்சியை ஒருங்கிணைக்கவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், விளம் பரத்தை கவனிக்கவும் 3 உயர் நிலை குழுக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிர டியாக அமைத்துள்ளார்.

மேலும், ரபேல் போர் விமான முறைகேடு பிரச்சா ரத்தை தீவிரப்படுத்தவும் திட்ட மிடப்பட்டு உள்ளது. மத்திய பாஜக அரசின் ஆட்சிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் முடி கிறது. அதற்கு முன்பாகவே தேர்தலை நடத்த பாஜ திட்ட மிட்டு, அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. அதேபோல், எதிர்க்கட்சியான காங்கிரசும் தயாராகி உள்ளது. முக்கியமாக, அனைத்து மாநி லங்களிலும் உள்ள காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மாற்றப் பட்டு, கட்சி பலப்படுத்தப் பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, இருதினங்களுக்கு முன் தேசிய அளவில் 7 பொதுச் செயலாளர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியமித்தார்.

தமிழக காங்கிரஸ் பொறுப் பாளராக இருந்த முகுல் வாஸ்னிக் மாற்றப்பட்டு அவருக்கு பதில் மகாராஷ்டிராவை சேர்ந்த எம்எல்சி சஞ்சய் தத் நியமிக்கப்பட்டார். தற்போது, தேர்தலை முழுவீச்சில் எதிர் கொள்ள 3 உயர்நிலை குழுக் களை நியமித்து ராகுல் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இந்த உயர்நிலை குழுக்கள் அடங்கிய பட்டியலை காங்கி ரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் வெளியிட்டார். ஒன்பது பேர் கொண்ட மைய குழு, 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு மற்றும் 13 பேர் கொண்ட விளம்பர குழுவை ராகுல் அமைத்துள்ளார். மைய  குழுவில் சோனியா காந்தியின் தலைமையில் செயல்பட்ட அனுபவம் வாய்ந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மற்ற இரண்டு குழுக்களில் மூத்த தலைவர்கள் மட்டுமின்றி, இளைய தலைமுறை தலைவர் களும் இடம் பெற்றுள்ளனர்.

மய்யக் குழுவில் ஏ.கே. அந்தோணி, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, அக மது படேல், ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜிவாலா, கே.சி. வேணுகோபால் ஆகிய 9 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர் கள், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை ஒருங் கிணைப்பு செய்வார்கள். தேர் தல் அறிக்கை குழுவில் பஞ்சாப் மாநில நிதியமைச்சர் பாதல் மான்பிரீத், காங்கிரஸ் மகளிர் பிரிவு தலைவி சுஷ்மிதா தேவ், பேராசிரியர் கவுடா ராஜீவ், அரியானா முன்னாள் முதல்வர் பூபீந்தர் சிங் ஹூடா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், குமாரி  செல்ஜா, சசிதரூர் மற்றும் பிந்து கிருஷ் ணன், ரகுவீர் மீனா, பேராசிரி யர் பலாசந்திரா மங்கீகார், மீனாட்சி நடராஜன், ரஜினி பாட்டீல், சாம் பிட்ரோடா, சச்சின் ராவ், தாம்ரவாஜ் சாகு, மேகாலயா முன்னாள் முதல் வர் முகுல் சங்மா, லலிதேஷ் திரிபாதி ஆகிய 19 பேர் இடம் பெற்றுள்ளனர்.

விளம்பர குழுவில் சரண் தாஸ், பிரவீன் சக்கரவர்த்தி, மிலின் தியோரா, கேட்கார் குமார், பவன் கேரா, சதீசன், ஆனந்த் சர்மா, ஜெய்வீர் ஷெர் கில், ராஜீவ் சுக்லா, திவ்யா சபந்தனா, ரன்தீப் சுர்ஜிவாலா, மணீஷ் திவாரி, பிரமோத் திவாரி ஆகிய 13 பேர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், மத்திய அரசு மீதான ரபேல் போர் விமான முறைகேடு பிர சாரத்தையும் தீவிரப்படுத்தவும் காங்கிரஸ் திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner