எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.28 மண விலக்கு வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. டில்லியில் கணவ ரிடம் விவாகரத்து கோரி ஒரு பெண் வழக்கு தொடர்ந்தார். அதனை எதிர்த்து அவரது கணவர் மேல்முறையீடு செய் தார். மேல்முறையீடு மனு நிலுவையில் இருந்திருக்கிறது. இந்நிலையில் முதல் மனை வியுடன் பேசி பிரச்சினைக்கு சமரச தீர்வுகண்டுள்ளார். இதன்படி இணை ஒத்திசைவின் பேரில் மணவிலக்கை ஏற்க இருவரும் முடிவு செய்தனர்.

மேலும், தன் மேல் முறையீட்டு மனுவையும் திரும்பப் பெறுவதற்காக நீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்துள்ளார். அவரின் மனுவை ஏற்று மேல் முறையீடை தள்ளுபடி செய் வதாக நீதிமன்றம் அறிவிப்பதற்கு இரண்டு வாரங் களுக்கு முன்பே அவர், இரண் டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண் டாவது மனைவியுடனும் அவருக்கு மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், முதல் திரு மணம் தொடர்பான மண விலக்கு வழக்கு நிலுவையில் உள்ளபோது, இரண்டாவது திருமணம் செய்து கொண்டது செல்லுமா என அவரது இரண்டாவது மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதி மன்றம் மணவிலக்கு வழக்கில் மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோது செய்துகொண்ட இரண்டாவது திருமணம் செல்லாது என தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட நபர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதி பதிகள் எஸ்.ஏ.பாப்டே மற் றும் எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்  மணவிலக்கு மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருந்த போது செய்துகொண்ட இரண் டாவது திருமணம் செல்லும். மனு தாரர்களிடையான மற்ற வழக்குகள், மறுதிருமணத்தின் மீது பொருந்தாது என உத்தர விட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner