எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 29- குழந்தைகள் காப்பகங்களின் நிலை தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள அறிக்கை அச்சுறுத்துவது போல் இருப்ப தாக உச்ச நீதிமன்றம் குறிப் பிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி மதன் பி லோகுர் தலைமையி லான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப் போது நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்கள் தொடர்பான குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையத்தால் அளிக்கப்பட்ட அறிக்கையை நீதிபதிகள் மேற் கோள்காட்டினர். அப்போது அவர்கள் கூறுகையில், அந்த அறிக்கையில், 2,874 காப்பகங் களில், 54 குறித்து மட்டுமே சாதகமான கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளது. காப்பக விவகா ரங்களில் தங்களது பணியை அரசு அதிகாரிகள் சரிவர செய்ய வில்லை. அதிகாரிகள் முறை யாக செயல்பட்டிருந்தால், பிகார் காப்பக சம்பவம் போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. இந்த அறிக்கையில் இருந்து, காப்பகங்கள் குறித்து யாருக் கும் கவலையில்லை என்பது தெரிகிறது. நீதிமன்றத்தாலும் உதவ முடியாது. நாங்கள் எது வும் கருத்து தெரிவித்தால், நீதித் துறை அதிகாரத்தை மீறுகிறது எனத் தெரிவிக்கப்படும்' என்றனர்.

அப்போது இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவி வரும் வழக்குரைஞர் அபர்னா பட் குறுக்கிட்டு, உச்ச நீதிமன் றத்தின் தீர்ப்பு அதிகாரத்தை மீறுவதாக கருதப்படாது; காப் பகங்களில் உள்ள குழந்தைகள் நலனே முக்கியம்' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையத்தின் அறிக்கையை பார்த்தீர்களா? அந்த அறிக்கை அச்சுறுத்துவது போல் உள்ளது' என்றனர்.

மத்திய பெண்கள், குழந்தை கள் நல மேம்பாட்டு அமைச்ச கம் சார்பில் ஆஜரான வழக்கு ரைஞர், குழந்தைகள் காப்பக விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து மாநிலங்கள், யூனி யன் பிரதேசங்கள் கூட்டத்துக்கு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருப்ப தாக குறிப்பிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 20ஆம் தேதிக்கு நீதிபதி கள் ஒத்திவைத்தனர். வழக்கு செப்டம்பர் 20ஆம் தேதி விசா ரணைக்கு வரும்போது, மேற் கண்ட கூட்டத்தில் விவாதிக்கப் பட்டவை குறித்து தெரியப் படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner