எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு

புதுடில்லி ஆக. 31 சுதந்திர தின நாள் பேச்சின் போது மோடி மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த காப்பீட்டின்படி உயிர் காக்கும் சிகிச்சைகள் அனைத்தும் நலி வுற்றோருக்கு அளிக்கப்படும் என கூறியிருந்தார்.  ஜன ஆரோக்ய யோஜனா'' என்னும் அந்த காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனி யார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் கட்டணங்கள் குறித்து திட்ட அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கை மருத்துவமனைகளி டையே ஏமாற்றத்தை உருவாக் கியுள்ளது.

இக்காப்பீட்டுத் திட்டம் குறித்து இந்திய மருத்துவர் சங்க தலைவர் அசோகன் கூறுகையில்,

இந்த அறிவிப்பில் குறிப் பிடப்பட்ட கட்டணங்கள் சாதாரண மற்றும் நடுத்தர மருத்துவமனை கட்டணங்களை விட மிகவும் குறைவாகவே உள்ளன. ஒவ்வொரு சிகிச்சை யும் தனித்தனியாகப் பார்க்கும் போது வழக்கமாக வசூலிக்கப் படும் தொகையில் 25 விழுக்காடு மட்டுமே இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி இவ்வளவு குறைவான தொகைக்கு சிகிச் சைகள் அளித்தால் மருத்துவ மனைகள் கடும் இழப்புக்கு உண்டாகும். அதனால் மருத் துவமனைகள் மூடப்பட்டு மருத்துவ சேவையில் கடும் பாதிப்பு உண்டாகும். அதனால் பல தனியார் மருத்துவமனைகள் இந்த காப்பீட்டு திட்டத்தினுள் வர மறுக்கக் கூடும்'' என தெரிவித்துள்ளார். மத்திய அரசு ரயில்வே மருத் துவமனை உள்ளிட்ட தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் மருத்துவமனைகளை மூடி விட்டு அவற்றை தனியார் நிர் வாகத்திடம் ஒப்படைக்கும் முடிவை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தனியார் மருத் துவமனைகள் மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தின்கீழ் வரு வதற்காக கட்டாய விதிமுறைகள் எதுவும் விதிக்கவில்லை. இத னால் பல தனியார் மருத்துவ மனைகள் மோடியின் மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராது. அப்படி இருக்க மோடி யின் மருத்துவக் காப்பீட்டு அறிக்கை அவரது எப்போதை யும் போல ஒரு பொய்யான அறிக்கையாகவே முடியும்.   2014-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பேசிய தூய்மை இந்தியா முதல் அதனைத் தொடர்ந்து பேசிய டிஜிட்டல் இந்தியா, ஸ்டார் அப் இந்தியா, ஸ்டேன் அப் இந்தியா, முத்ரா கடன் உள்ளிட்ட பல திட்டங்கள் வெறும் பேச்சில் மட்டுமே இருந்து வருகின்றன. இதனால் இதுவரை பெரிதாக எந்தப் பலனும் ஏற்பட்டுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   2016-ஆம் ஆண்டே அமித்ஷா மோடியின் பேச்சுக்கள் குறித்து பேசும்போது, இது எல்லாம் ஜும்லா (ஏமாற்று வாக்குறுதி) வாக்குகளைப் பெற சில உத்திகளைக் கையாளவேண் டும், அதை மோடி திறம்பட செய்துள்ளார்''என்று கூறியி ருந்தார். அது மோடியின் எல்லா அறிக்கைகளிலும் உண்மையாகி வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner