எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.31 மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் 1.1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்கள் பயனடைவார்கள்.

டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடை பெற்றது. இதில் அகவிலைப்படி உயர்வு தொடர் பாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி (டிஏ), ஓய்வூதிய தாரர் களுக்கு அளிக் கப்படும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை 2 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உயர்வு 2018 ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது. இப்போது அடிப்படை ஊதியம் மற்றும் அடிப்படை ஓய்வூதியத்தில் 7 சதவீதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இனி கூடுதலாக 2 சதவீதம் வழங்கப்படும். விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இந்த உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,112.20 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner