எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக நீதிபதிகளின் பெயர்கள் நிராகரிப்பு

புதுடில்லி, செப். 1- தேசிய பசு மைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர் லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக அந்நிறு வனம் தொடுத்துள்ள வழக்கின் படி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவுக்கு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் நிய மனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளின் பெயர் களை சிபிஎம் தரப்பில் முன் வைத்தபோதிலும் அவற்றை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் நிராகரித்தார்.ஸ்டெர்லைட் ஆலையை மீண் டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப் பாயத்தில் முறையீடு செய்து உள்ளது.

இவ்வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர் லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு, ஓய்வுபெற்ற நீதி பதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண் டும் என உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையைஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த ஒரு உறுப் பினர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச் சகத்தைச் சேர்ந்த ஒரு உறுப் பினர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.ஆனால், ஆய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான எஸ். ஜே.வசிப்தார் அந்த பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதை யடுத்து குழுவின் தலைவராக தருண் அகர்வால் பெயரை தீர்ப்பாயம் பரிந்துரை செய்து உள்ளது.

தமிழக அரசு தரப்பில் இப் படி ஒரு ஆய்வுக்குழு அமைப் பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தரப்பில் தமிழ கத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சந்துரு, பிரபா சிறீதேவன், சி.பி.சிவ சுப்ரமணியன் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ரவீந்திரன், ஏ.செல்வம் ஆகி யோரது பெயர்கள் முன்மொழி யப்பட்டன. இந்த இரு தரப்பு கருத்துக்களையும் நிராகரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் அருண்அகர்வாலை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்த தோடு வழக்கை தேதி குறிப் பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. புதிய நீதிபதி தலைமையிலான குழு 6 வாரத்திற்குள் ஸ்டெர் லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner