எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.1 ஆம் ஆத்மி கட்சி எம்.எல். ஏ. சஞ்சீவ்ஷா டில்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர், பாரதிய ஜனதா கட்சியும், பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் அரசுப் பொது பணத்தை பா.ஜ.க. பயன்படுத்துகிறது. அரசு பணத்தை எடுத்து கட்சி வளர்ச்சிக்கும், பிரசாரத்துக்கும் பயன்படுத்துகிறார்கள். என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி, எந்தெந்த மாநிலங்களில் பணம் தவறாக செலவிடப்படுகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்க் கண்ட் மாநிலங்களில் அரசு பணம் தவறாக செலவிடப்படுகிறது என்று கூறினார். அரசு விளம்பரங்களில் விதிமுறைகள் மீறப்பட்ட தாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து அரசு பணத்தை விளம்பரம் செய்ய தவறாக பயன்படுத்தினீர்களா என்று பா.ஜ.க. வுக்கு நீதிபதி கேள்வி விடுத்துள்ளார். இது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதில்அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மத்திய பிரதேசம், ஆகிய மாநிலங்களில் உள்ள பா.ஜ,க. அரசும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner