எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.4  -2019 மக்கள வைத் தேர்தலில், 30 முதல் 40 தொகுதிகளை பாஜக இழக்கும் என்று கூறி, அக்கட்சியினரை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத் வாலே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யுள்ளார்.

இந்திய குடியரசுக் கட்சியின் (அத்வாலே பிரிவு) தலைவரான ராம்தாஸ் அத்வாலே, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த முக்கியமான தலித் தலைவர் ஆவார். கடந்த தேர்தலில்பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த அத்வாலே, பந்தர்பூர் தொகுதியில் வெற்றிபெற்று, மத்திய சமூக நீதித்துறை அமைச்சராகவும் ஆனார். இந்நிலையில் தான் பேட்டி ஒன்றை அளித்தி ருக்கும் அத்வாலே, 2019 மக்கள வைத் தேர்தலில், பாஜக- அது கணித்திருப் பதைக் காட்டிலும் 30 முதல் 40 தொகுதி களை இழப் பதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

குறிப்பாக, குஜராத்தில் படேல் சமூகத் தினரின் பிரச்சினைக்கு தீர்வுகாணா விட்டால், 3 தொகுதிகளை பாஜக இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ள அத்வாலே, ஏற்கெனவே சட்ட மன்றத் தேர்தலில் 20 தொகுதிகளை பாஜக இழந்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner