எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ப. சிதம்பரம் கேள்வி

 

புதுடில்லி, செப். 4- மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆட்சியில் வராக்கடன் எவ்வளவு உள் ளது? என்று காங்கிரசு கட்சி யின் மூத்த தலைவரும், முன் னாள் மத்திய நிதியமைச்சரு மான ப. சிதம்பரம் கேள்வி யெழுப்பியுள்ளார்.

 

இதுதொடர்பாக சுட்டுரை யில் ப.சிதம்பரம் வெளியிட் டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

 

வராக்கடன் விவகாரத்தில் முந்தைய காங்கிரசு கூட்டணி அரசின் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி தெரிவிப்பது போல், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தபிறகு, அதை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை?

 

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு (மத்தியில் பாஜக அரசு அமைந்தபிறகு), எவ்வளவு கடன் அளிக்கப்பட்டுள்ளது? அதில் எவ்வளவு வராக்கடனாக மாறியுள்ளது? அந்த விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட வேண்டும்.

 

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பி னேன். ஆனால், அதற்குப் பதில் இல்லை என்று அந்தப் பதிவுகளில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

 

டில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தபால்துறையின் பேமண்ட் வங்கி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, வராக்கடன் அதிகரித்திருப்பதற்கு மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரசு தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். அப்போது அவர் பேசுகையில், ரூ. 1.75 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டு, திரும்ப செலுத்தாத 12 மிகப்பெரிய நிதி மோசடியாளர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்த கடன் அனைத்தும், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்பு  (காங்கிரசு கூட்டணி அரசின் ஆட்சியில்) அளிக்கப்பட்டவை ஆகும். இதேபோல், மேலும் 27 மிகப்பெரிய நிதி மோசடியாளர் களிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடி கடன் தொகையை மீட்பதற்கான நடவடிக்கையையும் மத்திய அரசு தொடங்கி யுள்ளது என்றார். இதற்கு பதிலளிக்கையும் வகையிலேயே, சுட்டுரையில் ப. சிதம்பரம் தனது பதிவுகளை வெளியிட்டு உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner