எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப். 4- குழந்தை களுக்கான அவசர உதவி எண் (1098)  சேவைக்கு தொடர்பு கொள்ளும் குழந்தைகள் பேசத் தயங்கி அமைதியாக இருந் தால், அவர்களை ஊக்கப் படுத்தி பிரச்சினைகளை எடுத் துச் சொல்வதற்கு உதவி புரிய வேண்டும் என்று அவசர உதவி எண் மய்ய அதிகாரிகளுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந் தைகள் நல மேம்பாட்டு அமைச் சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைச் சகத்தின் அதிகாரி ஒருவர் கூறி யதாவது:

அவசர எண்ணுக்கு அழைப்பு மேற்கொள்பவர்களில், மூன்றில் ஒரு பங்கு சிறார்கள் எதும் பேசாமல் அமைதியாக இருப்பர். சில குழந்தைகள் பிரச்சினைகளை வெளியில் சொல்வதற்கு பயப்படுவார்கள். பல நேரங்களில் குழந்தை கள் தங்களுடைய நெருங்கிய உறவினர் மீது புகார் அளிக்க தயங்குவார்கள். அந்த மாதிரி அழைப்புகள் வரும் போது, தொலைபேசியில் தொடர்பு கொண்ட குழந்தைகளுக்கு ஆலோசனை கூறி, அவர்களை தைரியமாக பேச வைக்க வேண் டும் என்று உதவி மய்யங்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அவசர உதவி எண்ணுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 3.4 கோடி அழைப்புகள் வந்துள்ளன. அதில் ஒரு கோடி அழைப்புகள் அமைதியாகவே(சைலன்ட்) துண்டிக்கப்பட்டன. நாடு முழு வதும் உள்ள 450 அவசர உதவி மய்யங்களுக்கு 6.6 லட்சம் புகார்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் தொந்தரவுகள் பற்றி வந்துள்ளன. 2017--2018ஆ-ம் ஆண்டில் மட்டும் 80 ஆயிரம் புகார்கள் தொந்தரவுகள் குறித்து வந்துள் ளன. மேலும், குழந்தைகளை காணவில்லை என்று 30 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. ஜூன் 30-ஆம் தேதி வரை யில் 1. 4 கோடி அழைப்புகள் அவசர உதவி எண்ணுக்கு வந் துள்ளன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 லட்சம் அழைப் புகள் வருகின்றன என்று அதி காரப் பூர்வ தகவல்கள் தெரி விக்கின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner