எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப். 4- உச்ச நீதி மன்றத்தில் பெண் நீதிபதிகள் மட்டுமே இடம்பெறும் அமர் வில், இந்த வாரத்தில் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. மூத்த நீதிபதி ஆர்.பானுமதி, நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகி யோர் அந்த அமர்வில் இடம் பெற்றுள்ளனர்.

இதுபோன்று பெண் நீதிபதி கள் மட்டுமே அடங்கிய அமர் வில் விசாரணை நடைபெறவி ருப்பது இது இரண்டாம் முறையாகும். வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த 2013-ஆம் ஆண்டில், நீதிபதிகள் கயான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசா ரணை நடத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் தற் போது ஆர்.பானுமதி, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகிய 3 பெண் நீதி பதி கள் உள்ளனர். இவர்களுடன் சேர்த்து, நாடு விடுதலை அடைந்த நாளில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட பெண் நீதிபதி களின் மொத்த எண்ணிக்கை 8 மட்டுமே. உச்ச நீதிமன்றம் கடந்த 1950-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 39 ஆண்டுகள் கழித்து 1989-ஆம் ஆண்டில் முதலாவது பெண் நீதிபதியாக பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார்.

கேரள உயர் நீதிமன்ற நீதி பதியாக பணியாற்றிய இவர், பின்னர் உச்ச நீதிமன்ற நீதிப தியாக தேர்வு செய்யப்பட்டார். பாத்திமா பீவிக்கு அடுத் ததாக சுஜாதா மனோகர், ரூமா பால், கயான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகி யோர் பல்வேறு காலகட்டங் களில் உச்ச நீதிமன்ற நீதிபதி யாக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினர்.

உச்ச நீதிமன்றத்தில் தற் போது பணியாற்றி வரும் மூத்த பெண் நீதிபதியான பானுமதி, கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டவர். அவரது பதவிக்காலம் 2020-ஆம் ஜூலை 19-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

இந்து மல்ஹோத்ரா கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப் பட்டார். அடுத்ததாக நீதிபதி இந்திரா பானர்ஜி கடந்த மாதம் பதவியேற்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner