எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.7 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகா ராட்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித் தது. மராத்தா சமூகத்தினரும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன் முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களில் டில்லியில் பிடி பட்ட ஒருவரிடம் கைப்பற்றப் பட்ட கடிதத்தில், ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம் என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது.  அந்த கடிதத்தில், அய்தரா பாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இதனை அடுத்து, வரவர ராவின் வீட் டுக்கு சென்று அவரை கைது செய்தனர். இதுபோல், தெலங் கானா, மராட்டியம், அரி யானா, ஜார்கண்ட், டில்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத் தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப் பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோத னையில், இடதுசாரி சிந்தனை யாளரும், வழக்குரைஞருமான சுதா பரத்வாஜ் கைது செய்யப் பட்டார்.

மும்பையில் நடந்த சோத னையில், மாவோயிஸ்டு ஆதர வாளர்கள் வெர்னன் கோன் சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனை யில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா அமர்வு கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், 5 பேரின் வீட்டுக்காவலை 12-ஆம் தேதி வரை நீட்டித்தார்.

மேலும், வழக்கில் மிக முக்கியமாக கருதப்படும் ஆவ ணங்களை மகாராட்டிரா காவல் துறையினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி பகிரங்கமாக வெளியிட்டது பொறுப்பற்ற செயல் என நீதிபதிகள் கண் டனம் தெரிவித்தனர்.