எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப். 8- பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது பசுக் குண்டர்களாலும், கும்பல்களாலும் நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்காத மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடுமுழுவதும்பசுக்களைப்பாது காக்கிறோம் என்ற பெயரில் சிறு பான்மையினரையும்,தாழ்த்தப்பட்ட மக்களையும்,மாடுகளை வியாபாரத் துக்குக்கொண்டு செல்பவர்களையும் ஆர்எஸ்எஸ்,பாஜக மதவெறி பிடித்த பசுக்குண்டர்கள் தாக்கிக் கொலை செய் யும் சம்பவங்கள் பல மாநிலங்களில் நடந்தன. இந்த சம்பவங்களைக் கட்டுப் படுத்தக் கோரி,  காந்தியாரின் கொள் ளுப்பேரன் துஷார் காந்தி உச்சநீதிமன் றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவைக் கடந்த ஆண்டு விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் அடங்கிய அமர்வு, பசுக் குண்டர்கள் மூலம் அரங்கேற்றும் தாக்குதலைத் தடுக்க மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிக்கை யாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஓய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் வெள்ளி யன்று விசாரணைக்கு வந்தது.

அப்பாவி மக்கள் மீது பசுக் குண்டர்கள் மற்றும் கும்பல்களாக தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க மொத்தமுள்ள 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில், 11 மாநிலங்கள் மட்டுமே அறிக்கையைத் தாக்கல் செய்தன. மற்ற மாநிலங்கள் தாக்கல் செய்யவில்லை. இதனால் நீதிபதிகள் பெரும் அதிருப்தியும், கடும் கோபமும் அடைந்தனர். அடுத்த ஒருவாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் விரிவான அறிக்கையையும், விளக்கத் தையும் தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க நேரிடும் என நீதிபதி கள் எச்சரித்தனர்.

இந்த விசாரணையின் இடையே மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக் குரைஞர் கூறுகையில்,

‘‘பசுக் குண்டர்களால் நடத்தப்படும் வன்முறைகளைத் தடுப்பதற்கான சட் டங்களை உருவாக்குவதற்காக மத்திய அமைச்சர்கள் கொண்ட அதிகாரமிக்க குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.