எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப். 9 பத்திரி கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான அமோல் காலே என்பவரை சிபிஅய் அமைப்பினர், தங் களது காவலில் எடுத்து விசா ரித்து வருகின்றனர். சமூக சீர் திருத்தவாதி நரேந்திர தபோல் கர் கொலையிலும் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாகத் தெரிகிறது. மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி நரேந்திர தபோல்கர் கடந்த 2013 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதி காலையில் நடைப்பயிற்சிக்கு சென்றபோது சுட்டுக் கொல்லப் பட்டார். அதேபோல, கருநா டக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப் டம்பரில் தனது வீட்டின் முன் பாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த இருவேறு கொலை சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக சிபிஅய் தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி யாக சந்தேகிக்கப்படும் சச்சின் பிரகாஷ்ராவ் ஆண்டூர் என்பவ ரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளில் அதனை உறுதி செய்யும் வகை யில் சில தகவல்கள் கிடைத்த தாகத் தெரிகிறது.

இதனிடையே, கவுரி லங் கேஷ் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அமோல் காலே என்பவரும் ஒருவர். அவர்தான் இந்த இரு கொலைகளிலும் முக்கிய திட்டங்களை வகுத் தவர் என சந்தேகிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் சிபிஅய் அமைப்பினர், அமோல் காலேவை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner