எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடந்த ஆண்டைவிட குறைந்தது

புதுடில்லி, செப். 9 -பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-க்கு பிறகு, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய் வோரின் எண்ணிக் கையும், வரி வசூ லும் அதிகரித்துள்ள தாக மோடி அரசு கூறியிருந்தது. நடப்பாண்டில் அது மேலும் அதிகரிக் கும் என்றும் தெரிவித்தது. அதாவது, வரி ஏய்ப்புக்கான வழிகள் அடைக்கப்பட்டு விட்டதால், வரிகள் கொட்டப் போகின்றன என்று கூறியது.

ஆனால், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் வருமான வரிக் கணக்கு தாக்கல்முடிவடைந்த நிலையில், வரி வருவாயின்நிலை குறித்து தணிக்கை அலுவலகம் அறிக்கை அளித்துள்ளது. அதில், மோடிஅரசு எதிர்பார்த்த அளவிற்கு வரி வசூலாகவில்லை என்றும், கடந்த நிதியாண்டைக் காட்டிலும், நடப்பு நிதியாண்டில் வரி வசூல்மிகவும் மோசமாக குறைந்து விட்டது என்றும்தெரிவித்துள்ளது.

2017&20-18 நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் 14.4 சதவிகிதம் அளவிற்கு உயரும்என்று மோடி அரசு எதிர் பார்ப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், 6.6 சதவிகிதம் அள விற்கே நேரடி வரி வசூல் உயர்ந்துள்ளது. இது கடந்த 2016&20-17ஆம் ஆண்டைக் காட்டிலும் வெறும் 0.6 சதவிகிதம் மட்டுமே அதிகமாகும். இந்தவகையில் முன்கூட்டி செலுத்தப்படும் வருமான வரியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவை ஒருபுறமிருக்க, நிறுவன வரிகள்மிகப்பெரிய அளவிற்கு அடி வாங்கியுள்ளது. 2017-&2018 நிதியாண்டில் நிறுவன வரிகள் சுமார் 10.15 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மோடி அரசு கூறியிருந்தது. ஆனால், வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே நிறுவன வரியில் உயர்வு ஏற்பட்டுள்ளது. நிறுவன வரிகளில் முன்கூட்டிசெலுத்தப்படும் வரியும் 0.57 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது.  நேரடி வரி வசூலைப் பொறுத்த வரை, இந்த வரிகளில் பெருமளவு திருப்பி அளிக்கப்பட்டு விட்டதால், வசூல் குறைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதனைக் கணக்கில் கொள்ளாமல் வரி வசூல் அதிகரிக்கும் என்று மோடிஅரசு பொத்தாம் பொதுவாக கணக்கிட்டுவிட்டது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner