எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.9 இந்தியாவில் உள்ள 91 முக்கிய நீர்த்தேக்கங் களில் நீரின் இருப்பு கடந்த ஒரு வாரத்தில் 4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நீர் வளத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் உள்ள 91 முக்கிய நீர்த் தேக்கங்களில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நீர் இருப்பு 69 சதவீதமாக இருந்தது. இது இந்த வாரம் செப்டம்பர் 6-ஆம் தேதி 73 சதவீதம் என்ற அளவை எட்டியது. அதாவது, 119.042 மில்லியன் கன மீட்டர்களை (பிசிஎம்) தொட்டது. நிகழாண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் நீர் இருப்பு அளவு 130 சதவீதமாக இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளின் போது நீர் இருப்பு 114 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. நாட்டில் உள்ள 91 முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு கொள்திறன் 161.993 பிசிஎம் ஆக உள்ளது. இது மொத்த இருப்பு கொள்திறனான 257.812 பிசிஎம்பில் 63 சதவீதமாகும். இந்த 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் 37 நீர்த்தேக்கங்களில் நீர் மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 60-க்கும் மேற்பட்ட மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வ தற்கான கொள்திறனை இந்த நீர்த்தேக்கங்கள் கொண்டுள்ளன என்று அந்த புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது. இந்த நீர்த்தேக்கங்களை மத்திய நீர் ஆணையம் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.