எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப். 10- ராகுல் தலைமையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்வது இன்றோ அல்லது நாளையோ  தானா கவே நடக்கும் என மக்களவை காங்கிரசு தலைவர் மல்லிகார் ஜூன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அடுத் தாண்டு நடைபெற உள்ளது. மத்தியில் பா.ஜ ஆட்சியை வீழத்த எதிர்க்கட்சிகளை ஒற்றி ணைக்கும் முயற்சிகள் தீவிர மாக நடந்து வருகின்றன. எதிர்க் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதும் இப்போது முடிவு செய்யப்படவில்லை. அது தேர் தலுக்குப் பிறகு முடிவு செய்யப் படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், காங்கிரசு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அளித்த பேட்டி: பா.ஜ ஆட்சியை அகற்ற நாட்டு மக் கள், ராகுல் காந்தியை எதிர் பார்த்துள்ளனர். அவரது பணியை எல்லோரும் புகழ்கின்றனர். அவர் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் இருக்கிறது. இதுவே அவரை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது. இதுபோல், மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு தலைவர் புதுச்சேரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும், மேற்கு வங்கத்திலிருந்து குஜராத் வரைக்கும் யார் இருக்கிறார்? ராகுலை தவிர வேறு யாரும் இல்லை.

எனவே, எதிர்க்கட்சிகள் அவரது தலைமையை ஏற்பது இன்றோ அல்லது நாளையோ தானாகவே நடக்கும். அடுத் தாண்டு தேர்தல், பா.ஜ ஆட் சியை அகற்றும் கொள்கை போராட்டமாக இருக்க வேண் டும் என்பதில் ராகுல் உறுதி யாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.