எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"இந்தியா டுடே" இதழ் அம்பலம்!

புதுடில்லி, அக். 11- -ரபேல் விமானக் கொள்முதல் ஒப்பந் தத்தைத் தொடர்ந்து, ரசியாவின் எஸ்-400 ரக ஏவுகணை ஒப்பந் தத்திலும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சு நாட்டின் டஸ் ஸால்ட் நிறுவனத்திடமிருந்து ரபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்யும் ஒப்பந் தத்தில் திடீரென ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் கூட்டு நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.

இதில் 40 ஆயிரம் கோடி ரூபாய்முதல் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடிரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அரசுப் பொதுத்துறை நிறுவ னமான எச்ஏஎல் நிறுவனத்தை வேண்டுமென்றே ஒதுக்கி வைத்து விட்டு, அனில் அம்பா னிக்கு  சாதகமாக ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டிருப்ப தாகவும், இதில் பிரதமர் மோடிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. தங்களின் குற்றச் சாட்டு தொடர்பாக, நாடாளு மன்ற கூட்டுக்குழு விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை. ஆனால்,மோடி அரசு தப்பித்து ஓடிக்கொண் டிருக்கிறது.

இந்நிலையில், சில நாட் களுக்கு முன்பு ரசியாவுடன் இந்தியா செய்துகொண்டுள்ள எஸ்-400 ரக ஏவுகணை ஒப்பந்தத்திலும் ரிலையன்ஸ் டிபென்ஸ் கூட்டு நிறுவனமாக சேர்க்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, ரிலை யன்ஸ் டிபென்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பையே ஆதாரமாக வைத்து, இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறு வனமும், ரசியாவின் எஸ்-400 ரக ஏவுகணைகள் தயாரிப்பு நிறுவனமான அல்மாஸ் அண் டியும் இணைந்து, இந்திய பாதுகாப்புக்குத் தேவைப்படும் எஸ்-400 ரக ஏவுகணைகளையும் ராடார்களையும் தயாரிக்க உள் ளன என்று ரிலையன்ஸ் டிபென்ஸ் தெரிவித்திருப்பதை யும், எஸ்-400 ரக ஏவுகணை ஒப்பந்தம் ரிலையன்ஸ் குழும வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அனில் அம்பானி குறிப் பிட்டிருப்பதையும் இந்தியா டுடே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமர் மோடி ரசியா சென்ற போதே, ரிலையன்ஸ் நிறு வனத்தை பங்குதாரராக்கும் பேச்சுக்கள் முடிந்து விட்டதாக வும், ரசியாவின் ரோசோபொ ரோன் நிறுவனத்தின் துணை நிறுவனமான அல்மெஸ் அண் டியுடன், எஸ்-400 ரக ஏவுகணை களுக்கான ஒப்பந்தத்தில் ரிலை யன்ஸ் டிபென்ஸ் கையெழுத் திட்டு விட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

இந்தியாவுக்கான பாது காப்பு ஆயுதங்களை தயாரிக் கும் எந்தவொரு வெளி நாட்டு நிறுவனமாக இருந்தாலும், அதுமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்உள்நாட்டு நிறு வனம் ஒன்றுடன் இணைய வேண்டும். ஆனால், அந்த உள்நாட்டு நிறுவனம் ரிலை யன்ஸ் டிபென்ஸ் மட்டும்தான் என்பதை, இந்த ஒப்பந்தம் மூலம் மோடி அரசு மீண்டும் உணர்த்தியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. எஸ்-400 ரக ஏவுகணை கொள்முதலுக்கான ஒப்பந்தத்தில் இந்திய நில அமைப்பின் இணைச் செய லாளரும், ரசியாவின் ரோசோ பொரோன் எக்ஸ்போர்ட் நிறு வனத்தின் பொது மேலாளரும் கையெழுத்திட்டத்தைத் தொடர்ந்து இந்திய அரசு கருத்து ஒன்றை வெளியிட்டது. ரசியாவின் ரோசோ பொரோன் நிறுவனத்திடம் ஏவுகணை வாங்கும் முடிவு, தேசத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதுதான் அது. ஆனால், எஸ்-400 ரக ஏவுகணை வாங்கும் முடிவு, தேசத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல; இதுவும் அனில் அம்பானியின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுதான் என் பது தற்போது உறுதியாகி யுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner