எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தகவல்

புதுடில்லி, அக்.11- தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மய்யம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை தொடர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது, நியூட்ரி னோ ஆய்வு மய்யம் விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனு மதி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வில்லை. இதனால் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் ராகேஷ் சர்மா, இது போன்ற திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே மாநில அரசு அளிக்கிறது. இதற்காக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்த அனுமதியும் கோரவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner