எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக்.11 ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனின் 3 நாள் பிரான்சு பயணத்தை, ரபேல் போர் விமானம் வாங்குவதுடன் தொடர்புபடுத்தி காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ’ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரான்சு நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதற்கான காரணம் உண்மையில் மிகவும் எளிமையானது.

பிரதமர்தான் இதில் முடிவெடுத்தார். எனவே நீதிமன்றம் கேட்டுள்ள விளக்கங்களுக்கு இனிமேல்தான் காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவே பாதுகாப்புத்துறை அமைச்சர் இன்றிரவு(நேற்று இரவு) பிரான்சு நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார்’ என்று குறிப்பிட்டு உள்ளார். நிர்மலா சீதாராமன் தனது பிரான்சு பயணத்தின்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner