எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ. 8- மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் அதிகரித்து வரு கிறது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜீத் படேல் மத்திய வங்கியின் அடுத்த வாரக் கூட்டத்தில் நவம்பர் 19 அன்று பதவி விலகலாம் என ஆன்லைன் மணிலைப் தகவல் வெளியிட்டு உள்ளது. ஆளுநரின்  நெருங்கிய வட்டார  ஆதாரங்களை மேற்கோள் காட்டி அது கூறி உள்ளது.

மணி லைப் வெளியிட்டு உள்ள தகவலில்  ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது படேல் ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டத்தில் பதவி விலகுவார். அவர் அரசாங்கத்துடனான போராட்டத்தில் களைத்து விட்டார் என்றும், அது அவரது உடல்நலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறி உள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கி உடனடியாக இதற்கு  பதிலளிக்க வில்லை.

மணி லைப்பில் வெளியிடப்பட்டு உள்ள  இந்த செய்தி  இந்திய புலனாய்வு பத்திரிகையாளரான சுஷ்தா தாலால் எழு தியது. அவர் புலனாய்வு அறிக்கைக்கு நன்கு அறியப்பட்டவர் ஆவார் . இவர் மணிலைப் நிறுவனர்களில் ஒருவர் ஆவார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner