எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசு தகவல்

டில்லி, நவ.8  டில்லியில் காற்றின் தரம் கடுமையான அளவுக்கு மோசமடைந்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளது. டில்லியில் காற்று மாசு குறித்த தகவல்கள் கவலையளித்து வரும் நிலையில், நேற்று காற்றின் தரம் மிகவும் கடுமையாக மோசமடைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. வாகனங்கள் வெளியிடும் புகை மற்றும் அண்டை மாநிலங் களில் பயிர்க்கழிவுகளை எரிப்பது போன்றவற்றால் டில்லியில் தொடர்ந்து காற்று மாசுபட்டு வருகிறது. இதனால் காற்றின் தரத்தை உறுதிசெய்யும் அளவுகோலில், காற்றின் தரக்குறியீடு திங்களன்று நிலவரப்படி 434 என்ற அளவுக்கு பதிவாகியிருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  இந்த அளவு காற்றின் தரம் உச்சபட்சமாக மோசமாக உள்ளது. மேலும் காஸியாபாத், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் காற்று கடுமையான அளவுக்கு மாசுபட்டி ருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபாவளியன்று சென்னையில் காற்று மாசு குறைந்தது

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் சென்னை, நவ.8 தீபாவளி அன்று சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதேநேரத்தில் தமிழகத்தைப் பொருத்தவரையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.  இதையடுத்து, தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கும் நேரமாக தமிழக அரசு அறிவித்தது. தீபாவளி அன்று சென்னையில் காற்றின் தரத்தை கண்டறிய பல இடங்களில் குறிப்பாக திருவல்லிக்கேணி, தியாகராய நகர், வேளச்சேரி என காற்று மாசை அளக்கும் கருவிகள் பொருத்தப் பட்டு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வெளியிட்டுள்ள அறிவிப் பில், பொதுவாக வழக்கமான நாள்களை விட தீபாவளி அன்று பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதால் அதனால் ஏற்படும் புகையினால் காற்று மாசு அபாயகர அளவை எட்டும். இதனை தொடர்ந்து கண்காணித்து வரும் மாசு கட்டுப்பாடு வாரியம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று சென்னையில் குறைந்த அளவு காற்று மாசு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.   வட மாநிலங்களை விட சென் னையில் மிகவும் குறைந்த அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.   இதனிடையே, பட்டாசு வெடிப்பதினால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசினை, கண்டறியும் கருவி, சென் னையில், தியாகராயநகர், பெசன்ட் நகர் உள்பட 5 இடங்களில் நிறுவப்பட்டு, கணக்கிட, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner