எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.11 -2017 - 20-18 வரி செலுத்தும் ஆண்டில், வெறும் 61 பேர் மட்டுமே ரூ. 100 கோடிக்கு மேலான வரு மானக் கணக்கு காட்டியுள்ளதாக மத்திய நிதித்துறை இணைய மைச்சர் பொன். ராதாகிருஷ் ணன் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டிகொண்டுவந்ததன் மூலம் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள், வரி ஏய்ப்பு ஆகியவற்றை பிரதமர் மோடி ஒழித்து விட்டார் என்று பாஜக-வினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ரூ. 100 கோடிக்கு மேல் ஆண்டு வரு மானம் கொண்டவர்கள் தங்களது வருவாய் விவரங் களை வருமான வரித் துறை யிடம் ரிட்டன் தாக்கலில் தெரிவிக்கவேண்டும்; அந்த வகையில், வெறும் 61 தனி நபர்கள் மட்டுமே 2017 - 20-18 வரி செலுத்தும் ஆண்டில் ரூ. 100 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர் என்று பொன். ராதாகிருஷ்ணன் நாடாளு மன்றத்தில் அளித்த எழுத்துப் பூர்வ பதிலில் தெரிவித்துள் ளார்.

100 கோடி ரூபாய் வருவாய் காட்டுவோரின் எண்ணிக்கை, 2014- -  2015இல் ஆண்டில் 24 ஆகவும், 2016- -  2017இல் 38 ஆகவும் இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

130 கோடி பேர்களைக் கொண்ட நாட்டில், 61 பேர் மட் டுமே ரூ. 100 கோடிக்கு வருவாய் கணக்கு காட்டு கிறார்கள் என்று அமைச்சர் கூறியிருப்பது, பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-க்குப் பிறகும் இந்த எண்ணிக்கை பெரி யளவில் உயரவில்லை என்ப தையே தெளிவாக்கி இருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner