எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச்14 முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் விங் கமாண்டர் அபிநந்தன் படத்தை முகநூல் பதிவு செய்த டில்லி பாஜ சட்டமன்ற உறுப்பினருக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.

மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டில்லியில் மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதை அடுத்து சமூகவலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டில்லி பாஜ எம்எல்ஏ ஓம் பிரகாஷ் சர்மா கடந்த 1ஆம் தேதி தனது  முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப் பட்ட விமானி அபிநந்தன் புகைப்படத்தை பதி விட்டுள்ளார். இதனுடன், பாகிஸ்தான் அடிபணிந்தது. நமது வீரம் மிகுந்த வீரர் திரும்பி வந்துள்ளார். மிக குறுகிய நேரத்தில் அபிநந்தனை பிரதமர் மோடி திரும்ப கொண்டுவந்துள்ளார்.

இது மிகப்பெரிய வெற்றியாகும் என பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சட்டமன்ற உறுப்பினர் சர்மாவிற்கு தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குசேகரிப்பின் போது வீரர்கள் படத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner