எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.13- பணமதிப்பு நீக்கத்தின் போது, 40 சதவிகிதம் கமிஷன் வாங்கிக் கொண்டு, பா.ஜ.க.வினரே கறுப்புப் பணத்தை மாற்றிக்கொடுத்தது தொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றை ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தர, தனக்கு 40 சத விகிதம் கமிஷன் வேண்டும்; ஏனென்றால் அந்த கமிஷனை மேலிடத்திற்கு கொடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் பேசியதும், அதன்படியே, சம்பந்தப்பட்ட நபரை, குஜராத் பா.ஜ.க. அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் பா.ஜ.க. நிர்வாகி, பின்னர் பெரிய சூட்கேஸூடன் வெளியே வருவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது.

பா.ஜ.க.வின் தில்லுமுல்லு!

குறைந்தபட்சம் ரூ. 10 லட்சத்தில் துவங்கி எத்தனை கோடி ரூபாயை வேண்டுமானாலும் தங்களால் மாற்றித்தர முடியும்; அதற்கான வழிகள் எங்களிடம் இருக்கின்றன; மோடியிருக்கும் போது எதற்குப்பயப்பட வேண்டும் என்றும் அந்த பா.ஜ.க. நிர்வாகி வீடியோவில் கூறியி ருந்தார்.

இந்நிலையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது பிரதமர் அலுவலகம் மற்றும் அமித்ஷா நடத்திய மிகப்பெரிய நிதிமோசடி என்பதற்கான புதிய வீடியோ கிளிப்பிங்சையும் காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்டோர் வெளியிட்டுள் ளனர்.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது பணப் பரிமாற்றம் செய்யும் செயல்பாடுகளில் பிரதமர் அலுவலகமும், பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவும் தலையிட்டதாக, ரா(RAW) உளவு அமைப் பைச் சேர்ந்த அதிகாரி இந்த வீடியோவில் பேசி யிருக்கிறார்.

அதிர்ச்சி தகவல்கள்!

அதாவது, பண மதிப்பு நீக்கத்தின் போது ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை வெளிநாட்டில் அச்சடித்து, டில்லி அருகேயுள்ள ஹிண்டன் விமானப் படைத்தளத்தின் வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வந்து, அதை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றினார்கள்; பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த நிபுண் சரண்என்பவர் தான், இந்த ஆபரேஷனை ஒருங்கிணைத்தார். இதற்காக 26 பேரின் மேற்பார்வையில் பணப் பரிமாற்றக்குழு வையும் அமைத்திருந்தார்கள் என்பன போன்ற அதிர்ச்சியான தகவல்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. பா.ஜ.க. தலைவர்அமித்ஷாவின் பெயர் இந்த வீடியோவில் இரண்டு இடங்களில் வருகின்றன.

100 கோடியை மாற்றிட வசதி!

மற்றொரு வீடியோ கிளிப்பில், மும்பையில் போர்ட் பகுதியில் உள்ள இந்துஸ் இண்ட் வங்கியின் மேலாளர் சஞ்சய் ஷானே 100 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் தாள்களை மாற்றிக்கொடுப் பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத் ததற்கான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன.

ரூ.300 கோடிக்கான வீடியோ ஆதாரம்!

மகாராஷ்டிராவில் உள்ள தொழில் துறை மேம்பாட்டுக் கழகத்தின் குடோனில் இந்த ரகசியப் பரிவர்த்தனை நடந்துள்ள நிலையில், ரூ. 320 கோடி வரையில் புதிய ரூபாய் தாள்களை மாற்ற வேண்டியிருப்பதாக அந்த வீடியோ கிளிப்பில் சஞ்சய் ஷானே கூறுவதும் பதிவாகியுள்ளது. புதிய வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட கபில் சிபல், இந்த நிதிமோசடி தொடர்பான வீடியோ பல மணி நேரங்கள் ஓடக்கூடியது; ஆனால், சிறு பகுதியே தற்போது வெளியிடப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

அமித்ஷா தலைமையில் சிறப்பு அணி!

பணமதிப்பு நீக்கம் நடைபெற்ற நேரத்தில், அமித்ஷா தலைமையில் சிறப்பு அணி ஒன்று அமைத்து பழைய ரூபாய் தாள்களுக்குப் பதிலாக புதிய ரூபாய் தாள்களை மாற்றிக் கொடுத்துள்ளனர்; கறுப்புப் பணத்தை மாற்றிக் கொடுத்த முறைகேடுகளில், பிரதமர் அலுவலகத் துக்கும், பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித் ஷாவுக்கும் நேரடி தொடர்பிருக்கிறது; இதற்கு 15 முதல் 40 சதவிகிதம் அளவிற்கு கமிஷன் பெற்றுக் கொண்டி ருக்கிறார்கள் என்றும் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner