எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, ஏப்.14, இந்திய ராணுவத்தை அரசியல் லாபத்துக்கு அரசியல்வாதிகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 150 முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் ஒப்பமிட்டவர்களின் பட்டியல் சமுகஊடகங் களில் பரவி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறும்போது, “கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்சா ஆகியோர் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்போது, ‘புல்வாமா தாக்குத லுக்கு பாலகோட் தாக்குதல் மூலம் நாங்கள்தான் பதிலடி கொடுத்தோம்’ என்ற ரீதியில் பேசி வருகின்றனர். ராணுவ வீரர்களின் தியாகத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அரசியல் லாபத்துக்காக பாஜக அதை பயன்படுத்தக்கூடாது” என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner