எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாக்பூர் பல்கலைக் கழகப் பதிவாளர் பூரணசந்திர மேஷ்ரம் வலியுறுத்தல்

நாக்பூர், ஜன. 2- டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் லட்சக் கணக்கான தொண்டர்களுடன் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு, புத்தத்தை தழுவினார்.

அந்த தம்மதீக்க்ஷா 60ஆம் ஆண்டு நிறைவைக் குறிப்பிடும் வண்ணம் இரண்டு நாள் கருத் தரங்கு சிறீமந்த் பூரணசந்திர புட்டி சபாகுரு பகுதியில் நாக்பூர் பல்கலைக் கழகத்தின் புத்த ஆய்வியல் துறையும் பாலி பிராக்ரித் துறையும் இணைந்து நடத்தின.

இரண்டாம் நாள் நிறைவு விழாவில் நாக்பூர் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் பூரண சந்திர மேஷ்ரம்  கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, “தாழ்த்தப்பட்ட வர்களுக்கு எதிராக உள்ள ஆதிக்க சக்திகளை எதிர்கொள் ளும்வகையில் வரலாறை நன்கு புரிந்து கொண்டு டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் போன்ற தலைவர்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உருவாக்கிட முன் வரவேண்டும். மகாராஜா  சாயாஜிராவ் கெய்க்வாட் ஒடுக் கப்பட்ட மக்களின் உயர்வுக் காக அவருடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுவந்தார்.

அவர் அம்பேத்கரிடம் ஏற்பட்ட ஆர்வத்தைக் கண்டு, அம்பேத்கர் உயர்கல்வி பெறு வதை உறுதிசெய்தார். அம்பேத் கரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததுடன், எவரும் எட்ட முடியாத உயரத்தை அம்பேத்கர் எட்டியதையும் கண்டார். தாழ்த் தப்பட்ட ஜாதியினர் கல்வி பெறவும், நல்வாழ்வு பெற்று உயர்ந்திடவும் மராட்டிய தலை வர்கள் பலரும்  வழிகாட்டியுள் ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்பேத்கர் புத்தத்தை தழுவியபோது அவருடன் பல லட்சக்கணக்கானவர்களும் தம்மதீக்க்ஷா தழுவச் செய்தார். புத்தம் பரவியதில் அவருக்கு நிகரற்ற பங்களிப்பு இருந்த தையும் கருத்தரங்கில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

புத்தம், பாலி மொழி மற் றும் புத்தவியல்ஆய்வுகள்  மற் றும் பலதுறைகளிலும் விழிப்பை ஏற்படுத்திய புத்தம் குறித்த விவாதங்கள் கருத்தரங்கில் நடைபெற்றன.

தம்ம தீக்ஷா 60ஆம் ஆண்டு நிறைவு விழாவில் லக்னோ வைச் சேர்ந்தவரான பிக்கு சந் திமா, நாக்பூரைச் சேர்ந்தவர் களான பிரதீப் அக்லேவ், பிரி யதர்ஷினி கோபர்கடே, துல்சா டங்காரே, புனேவைச் சேர்ந்தவ ரான கணேஷ் இங்கிள், ஹடோலாட்டி லத்தூர் பகுதி யைச் சேர்ந்தவரான கோவிந்த் ஷிலே, அமராவதி பகுதியைச் சேர்ந்தவரான சரோஜ் டாங்கே  உள்பட பலரும் கலந்துகொண் டனர்.

ஏராளமான அம்பேத்கர்கள் நமக்குத் தேவை!
தம்ம தீக்க்ஷா 60 ஆம் ஆண்டு நிறைவு விழா கருத்தரங்கில்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner