எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிராமப்புறங்களுக்கு
40 சதவிகித நோட்டுகள்  விநியோகம்
வங்கிகளுக்கு  உத்தரவு

புதுடில்லி, ஜன.4 உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு திரும்பப் பெற்ற நடவடிக் கையால் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாக ஏழைகளும் விவசாயிகளும் எதிர்கொண்டு வரும் சிரமங்களைக் குறைக் கும் நோக்கில், கிராமப்புறங்களில் 40 சதவீத ரூபாய் நோட்டுகளை விநியோகிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி செவ்வாய்க் கிழமை உத்தர விட்டது.

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தது. இந்த 50 நாள் நடவடிக்கை டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி முடிவடைந்தபோதிலும், நாட் டின் பல்வேறு பகுதிகளிலும் பண விநியோக நிலைமை இன்னும் சீரடைய வில்லை. இதன் விளைவாக, வாரத்துக்கு ரூ.24,000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்பை மத்திய அரசு தளர்த்த வில்லை. பணத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, கிராமப்புறங்களில் தேவைக்கு ஏற்ப போதிய அளவில் ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்பட வில்லை என்பதை ரிசர்வ் வங்கி கவனித் துள்ளது. அதை சரிசெய்வதற்காக சில நட வடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கியுள் ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாட் டைப் போக்குவதற்காக கிராமப்புறங்களில் 40 சதவீத நோட்டுகளை விநியோகிக்குமாறு ரூ.100-க்கும் குறைவான மதிப்புடைய நோட்டுகளை தாராளமாக புழக்கத்தில் விடு மாறும் வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத் தியுள்ளது.

அதாவது, நிதி இருப்பை வைத்துள்ள பெரிய வங்கிகள் புதிய ரூபாய் நோட்டுகளை தங்களின் மண்டல ஊரக வங்கிகள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், கிராமப்புறங்களில் உள்ள அஞ்சல் நிலையங்கள் ஆகியவற்றுக்கு விநியோகிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner