எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 18- கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அலுவலகம் மீது நடத் தப்பட்ட குண்டுவீச்சு தாக்கு தலுக்கு கண்டனம் தெரிவித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலு வலகத்தின் மீது சனிக்கிழமை காலை பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக் கிறது. இதில் கட்சிக்கு சொந் தமான நான்கு சக்கர வாகனம் மற்றும் அலுவலகத்தின் ஜன் னல் பகுதி சேதமடைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தின் மீதான இத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண் டிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் உழைக்கும் மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அணுகும் இடமாக செயல் பட்டு வருகின்றன. கடந்த காலத் தில் கோவை மதக்கலவரத் தால் பாதிக்கப்பட்ட போதெல் லாம் மக்கள் ஒற்றுமைக்காக வும், மதநல்லிணக்கத்திற்காக வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளப்பரிய பங்காற்றியுள் ளது. கோவை மாவட்டத்தில் மக்கள்ஒற்றுமையையும், அமைதியையும் குலைக்க விரும்பும் சக்திகள் சமீப கால மாக அதிகரித்து வருவது கவலை தரத்தக்க அம்சமாகும். சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் அலுவலகங்கள் தாக்கப் பட்டதும், கொடிக்கம்பங்கள் வெட்டப்பட்ட சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன.

காலை நேரத்தில் கட்சி அலுவலகத்தின் மீது நடை பெற்றுள்ள இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து, சட்டப்படியான நடவடிக்கை கள் எடுக்க வேண்டுமெனவும், கோவையில் சமீப காலமாக தலைதூக்கியுள்ள இத்தகைய வன்முறை நடவடிக்கைக்கு முடிவுகட்ட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயற்குழு தமி ழக அரசையும், காவல்துறை யையும் வலியுறுத்துகிறது. தமி ழகத்தின் ஜனநாயக இயக்கங் கள் இத்தகைய வன்முறை தாக் குதலுக்கு எதிராக உறுதியாக கண்டனக் குரலெழுப்ப வேண் டுமெனவும் கேட்டுக் கொள் கிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner