எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கவுஹாத்தி, நவ. 11 சலவை சோப்பு, ஷேவிங் கிரீம்  உட்பட 178 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து18 சதவீதமாக குறைக்கப்பட்டுள் ளது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத் தப்பட்டது. இதன் மூலம் ஏற்கெனவே நடை முறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படை யில் விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி 5, 12, 18, 28என நான்கு விகிதங்களில் வசூலிக் கப்படுகிறது; சில சொகுசுப் பொருட்களுக்கு கூடுதல் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால் உற்பத்தி யாளர்கள், தொழில் முனை வோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள் ளனர்.

தீவிரமாக நடந்து வரும் எதிர்ப்புப் போராட்டங்கள் மற் றும் குஜராத் தேர்தல் உள்ளிட்ட வற்றின் பின்னணியில் இதைத் தொடர்ந்து சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகி தம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரவைக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத் தது.இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-ஆவது கூட்டம் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் வெள்ளியன்று நடைபெற்றது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங் கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின், பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறியதாவது: பல்வேறு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்ற அமைச்சரவை குழுவின் பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக் கொண்டது.

227 பொருட்கள் தற்போது 28 சதவிகித வரி விதிப்பின் கீழ் வருகின்றன. இதில் 62 பொருட் கள் மட்டுமே இருக்க வேண்டும் என அமைச்சரவைக் குழுபரிந் துரைத்தது. ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில்இந்த எண்ணிக்கையை மேலும் குறைத்துள்ளது.

தற்போது, 28 சதவீத வரை யறைக்குள் 50 பொருட்கள் மட்டுமே வருகின்றன.

ஷேவிங் கிரீம், ஷேவிங் லோஷன், பற்பசை, ஷாம்பூ, அழகுசாதனப் பொருட்கள், முக அழகு கிரீம்,சுவிங்கம், சாக்லெட் உள்ளிட்ட பொருட்களுக்கு தற் போது விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

டிராக்டர் மற்றும் அதன் உதிரி பாகங்கள், திரைப்படம் தயாரிப்பு சாதனங்கள் உள்ளிட்ட வற்றிக்கும் வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

விளைபொருட்களை சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளுக்கான வரி 12 சதவீதமாக குறைக்கப்படு கிறது.

எனினும் வாஷிங்மெ ஷின், ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்டவற்றிற்கு தற்போ துள்ள 28 சதவீத வரியே தொட ரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner