எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருமலை, நவ.13  ஆந்திரா வில் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து 18 சுற்றுலா பயணிகள் பக்தர்கள் இறந்தனர். 7 பேரை காணவில்லை.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோலை சேர்ந்த 38 பேர், வாக்கர் கிளப் சார்பில் கிருஷ்ணா மாவட்டம், இப்ராகிம்பட்டணத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் ஆரத்தி எடுப்பதை காண நேற்று சென்றனர். அப்போது, ஆந்திர மாநில சுற்றுலாத்துறையை சேர்ந்த அனைத்து படகுகளும் நிரம்பியதால், தனியார் படகில் ஏறி சென்றனர். மாலை 6 மணி யளவில் இப்ராகிம்பட்டணம் நோக்கி படகு சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்ற நிலையில் படகு திடீ ரென தலைகீழாக கவிழ்ந்தது.

அப்போது, படகில் இருந்த 38 பேரும் ஆற்றில் விழுந்தனர். தங்களை காப்பாற்றும்படி அலறினர். பயணிகளின் சத்தம் கேட்டு, கரையோரம் இருந்த பொதுமக்கள் செய்வது அறி யாது திகைத்து கூச்சலிட்டனர். அப்போது, அங்கு ஏற்கனவே தயாராக இருந்த நீச்சல் வீரர் களும், பொதுமக்களும் அவர் களை காப்பாற்ற முயன்றனர். கிருஷ்ணா மாவட்ட காவல் துறையினர் தீயணைப்பு படை வீரர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 6.30 மணியளவில் 13 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். 18 பேர் சடலங்களாக மீட்கப்பட் டனர். 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. இந் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 30 பேர் கொண்ட 2 குழுவும், மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 45 பேரும், தீயணைப்பு படை வீரர்கள் 60 பேர் கொண்ட குழுவினர் 12 படகுகள் மூலம் காணாமல் போன 7 பேரை தேடி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner