எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ.26 குஜராத் தில், 2002இல் நடந்த வன்முறை யின் போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் பாலி யல் வன்முறை செய்யப்பட்ட துடன், அவருடைய குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் கொல் லப்பட்ட சம்பவத்தில், தண் டனை விதிக்கப்பட்ட காவல் துறையினர்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்து, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

குஜராத்தில், கடந்த 2002இல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, வன் முறை சம்பவங்கள் நடந்தன. அதில், குடும்பத்தாருடன் தப்ப முயன்ற, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணை, சிலர் பாலியல் வன்முறை செய்தனர். அவருடைய இரண்டரை வயது மகள் உட்பட, குடும்பத்தைச் சேர்ந்த, ஏழு பேர் கொல் லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில், சாட்சியத்தை மாற் றியது, பொய் மருத்துவ பரிசோ தனை அறிக்கை தாக்கல் செய் தது போன்ற குற்றங்களுக்காக, அய்ந்து காவல்துறையினர் இரண்டு டாக்டர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதி மன்ற அமர்வு, காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் குறித்த அறிக் கையை தாக்கல் செய்யும்படி, அக்., 23இல் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது, அமர்வு உத்தரவிட்டதா வது: காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, மாநில அரசு கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. அத னால், ஆறு வாரங்கள் அவ காசம் தரப்படுகிறது. 2018ஆம் ஆண்டு ஜனவரியில், இந்த வழக்கு விசாரிக்கப்படும்.

கூடுதல் இழப்பீடு கேட்டு, பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கின் விசாரணை, அடுத்த வாரம் நடைபெறும். இவ்வாறு நீதிமன்றம் அமர்வு கூறி யுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner