எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கஜூராகோ, டிச. 5 -நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு லோக்பால் சட்டத்தை பல வீனப்படுத்திவிட்டது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டி யுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-


அரிதாக பேசும் மன்மோகன் சிங், லோக்பால் சட்டத்தை கொண்டுவரும் போது பலவீன மாக கொண்டு வந்தார். ஆனால், மோடி, லோக்பால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, அதை மேலும் பலவீனப்படுத்தி விட் டார். மோடி அரசு, 2016 ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி கொண்டு வந்த திருத்தத்தின்படி, அரசு ஊழியர்களின் மனைவி, மகன், மகள்கள் உள்ளிட்ட பிற நெருங்கிய உறவினர்களும், ஆண்டுதோறும்சொத்துவிவ ரங்களை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றாக் கப்பட்டுஇருக்கிறது.முன்ன தாகதிருத்தப்படாதலோக்பால் சட்டத்தின் படி ஆண்டுதோறும், அரசு ஊழியர்களின் குடும்பத்தி னரும் சொத்து விவரங்கள் தாக்கல் செய்யவேண்டும் என்ற விதி இருந்தது. லோக்பால் சட்டத் திருத்த மசோதா, எந்த விவாதமும் இன்றி ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டது.ஆனால்,அடுத்தமூன்றேநாள் களில் இந்தசட்டம் பலவீனப் படுத்தப்பட்டது.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner