எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பால் தராத வறண்ட பசுக்களை பரிசளிப்பதா?

அரசிடமே திருப்பிக் கொடுத்த அரியானா மாநில  குத்துச் சண்டை வீராங்கனைகள்

சண்டிகர், ஜன.9 அசாம் மாநிலத்தில் பன் னாட்டு இளம் பெண்க ளுக்கான குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்றது.

அரியானா மாநி லத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் அறுவர் அப் போட்டியில் வாகை சூடினர். அரியானா மாநில பாஜக அரசு அவ்வீராங்கனைகளுக்கு பசு மாடுகளை பரிசாக அளித்தது. அரியானா மாநிலத்தை ஆளும் பாஜக அமைச்சர் ஓ.பி.தாங்கர் பசு மாடுகளை  வீராங்கனைகளுக்கு வழங்கினார்.

அரசு சார்பில் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட பசு மாடுகளில் பால் தராத வறண்ட மாடுகளும் இருந்துள்ளன. குத்துச் சண்டை வீராங்கனைகளில் ஒருவரான பிவானி பகு தியைச் சேர்ந்த சாக்சி என்பவர் உள்பட மூன்று வீராங்கனைகள் தங்களுக்கு பரிசாக அளிக்கப்பட்ட பால் தராத பசு மாடுகளை மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பிவைத்துவிட்டனர்.

அதற்கு காரணமாக அவர்கள் கூறுகையில், எங்கள் வீட்டில் பசு மாடுகளுக்கு போதுமான இடமில்லை. மோச மான அந்த முரட்டு மாடுகள் எங்கள் குடும்பத்தினரை முட்டித் தாக்கிவிட்டன. மேலும் பாலும் தரவில்லை என்று கூறினர். அரியானா மாநிலத்தில் பெவானி பகுதியைச் சேர்ந்த நீது, சாக்சி, ரோக்தக் பகுதியைச் சேர்ந்த ஜோதி, ஹிசார் பகுதியைச் சேர்ந்த சாக்சி ஆகியோர் பன்னாட்டு குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றனர். பால்வால் பகுதியைச் சேர்ந்த அனுபமா, கைதால் பகுதியைச் சேர்ந்த நேகா ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை வென்றனர்.

பன்னாட்டு குத்துச்சண்டைப் போட்டியில் வாகை சூடிய வீராங்கனைகளுக்கு 15 நாள்களுக்கு முன்பாக அரசு சார்பில் பசு மாடுகள் அளிக்கப்பட்டன. பசு மாடுகளால் எவ்வித பயனையும் பெற முடியவில்லை. அதனால் அவ்வீராங்கனை களின் குடும்பத் தினர் பசுமாடுகளை அரசிடமே திருப்பி கொடுத்துவிட்டார்கள். பிவானியையடுத்த தனானா கிராமத்தைச் சேர்ந்த நீது குமாரியின் குடும்பத்தினரும் அரசு அளித்த பசு மாட்டைத் திருப்பிக் கொடுத்து விட்டனர்.  பசு மாட்டை வைத்து பராமரிப்பதற்கு தங்கள் வீட்டில் போதுமான இடம் இல்லை என்று குறிப்பிட்டு குத்துச் சண்டை பயிற்றுநர் ஹிசார் பகுதியைச் சேர்ந்த சாக்சி தொடக் கத்திலேயே பசு மாட்டைப் பெற மறுத்துவிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner