எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜன.11 கருநாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் முடிகேரே பகுதியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததற்கு காரண மான பாஜக இளைஞர் பிரிவு தலைவர் கைது செய்யப்பட்டார்.

வாட்ஸ் அப் சமூக ஊடகத்தில் முசுலீம் குழுவில் இணைந்து விருப் பம் (றீவீளீமீ) தெரிவித்த கல்லூரி மாணவியை, பஜ்ரங் தள் மற்றும் பாஜகவின் இளைஞர் அமைப்பான பாரதிய யுவ மோர்ச்சா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த இந்துத்துவ வன்முறையாளர்கள் தொலைபேசி அழைப்புகள்மூலம்  விடாமல் தொந்தரவு கொடுத்ததுடன் அப்பெண்ணின் வீட்டுக்கும் விடாமல் துரத்திச் சென்று அச்சுறுத்தி வந்தனர்.

வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவி தான்யசிறீ (வயது20). இவர் Ôவாட்ஸ் அப்Õ சமூக ஊடகத்தில் முசுலீம் குழுவை விருப்பம் தெரிவித்து பதிவு செய்தார். அதனையடுத்து சங் பரிவார வன்முறை வெறிக்கூட்டம் அம்மாணவியை தொலைபேசி அழைப் புகள்மூலமாக தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்துள்ளது. அவள் தாயிடமும் அச்சுறுத்தல் தொடர்ந்தது. பின்னர் அப்பெண்ணின் வீட்டுக்கே விரட்டிச் சென்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பிக்க எண் ணிய அம்மாணவி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

காவல்நிலையத்தில் புகார்

இதுகுறித்து அப்பெண்ணின் தாய் தையல் வேலை செய்துவருபவரான சரசுவதி சுவர்ணா புகார் கொடுத்தார்.

காவல்நிலையத்தில் அளித்த புகாரில் உள்ளதாவது:

4.1.2018 அன்று அறிமுகமில்லாத செல்பேசி எண்ணிலிருந்து பேசியவர்கள் வாட்ஸ் அப் செய்தி குறித்து கேட் டுள்ளனர். அதுகுறித்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்கள்.

அதன்பின்னர் அந்த நபர் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ் என்பவன் எனத் தெரிய வந்தது.

Ôவாட்ஸ் அப்Õ பில் பதிவேற்றப் பட்டபடத்தில்தலையைதுணி யால்மூடியிருப்பதேன்?என்று கேட்டுள்ளான்.அவன் தொடர்ச்சியாக தொலைபேசிமூலமாக தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந் தான். சில நேரங்களில் மாணவியின் தாயிடமும் பேசியுள்ளான். மகளைக் கட்டுப்படுத்திவைக்கவேண்டும்என் றும் இல்லையென்றால், மதம் மாறிவிட்டதாக படம் பதிவேற்றப்பட்டுவிடும் என்று எச்சரித்தான்.

பஜ்ரங்தள்அமைப்பைச்சேர்ந்த வர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்டது ஒரு கும்பல். அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அடுத்த நாளிலேயேவீட்டுக்கு நேரில் சென்று அவர் மகளை தரக்குறைவாக பேசி யுள்ளனர்.

6.1.2018 அன்று வீட்டில் தனியாக இருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

முசுலீம் பையன் ஒருவனுடன் தொடர்பு என்று இல்லாத ஒன்றை, பொய்யாகக் கூறிக்கொண்டு இந்துத்து வாவாதிகளின் துன்புறுத்தல்களைத் தாங்க முடியவில்லை என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாள். இவ்வாறு புகாரில் குறிப் பிடப்பட்டுள்ளது.

அவர்கள் அளித்த தொந்தரவி னாலேயே அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக அவள் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

Ôமாரல் குண்டாகிரிÕ- நெறிபுகட்டும் குண்டர்கள் என்றழைக்கப்படுகின்ற அவர்கள்மீது சிக்மகளூர் மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவன் கைது

அப்பெண்ணின் தாய் தையல் வேலை செய்துவருபவரான சரசுவதி சுவர்ணா அளித்த புகாரின்பேரில், பாஜகவின் இளைஞர் பிரிவாகிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் தலைவர் அனில் ராஜ் கைது செய்யப்பட்டார். மேலும், பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ் உள்ளிட்ட மற்ற குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர். காவல்துறை யினர் அவர்களைத் தேடி வருகிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner