எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரீம்நகர், ஜன.18 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 44ஆவது ஆண்டு நினைவு நாள் தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பிரஜா நாத்திக சமாஜத்தின் சார்பில் ஜி.டி.சாரய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சந்திரன் உரை

இக்கூட்டத்தில் நெல்லூர் ஆந்திர பிரதேசம் முற்போக்கு மக்கள் இயக்கத்தின் சார்பில் பெரியாரின் கருத்து பரப்பு ரையாளர் சந்திரன் கலந்து கொண்டு உரையாற்றுகையில்,

பெரியாரின் கருத்துக்கள் காலம், மொழி, பிராந்தியங்களை கடந்து உலகம் முழுவதும் பொதுவானவை என்றும், பெரியார் காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார். வளர்ந்து வரும் வகுப்புவாத ஜாதிய மூடநம்பிக்கைகளை எதிர்கொள்ள பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை ஆயுதமாக பயன் படுத்தவேண்டும்.

பெரியார் தன்னை இறை மறுப்பாளன் என்று கூறியது, சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளுக்கும் தீண்டாமை, பெண் ணடிமை, பிற்போக்கான மூடநம்பிக்கைகளுக்கும் மூடத்தன மான இறைப்பற்றே காரணமென்பதால்தான் என்று கூறினார்.

ஜாதிய வேறுபாடுகளை களைந்து மானிடம் ஒன்றுபட இறைப்பற்றை விட்டொழிக்க வேண்டுமென்றார். புராண இதிகாச கட்டுக்கதைகளைப் பொய் புரட்டுகளையும் நயவஞ்சக சூழ்ச்சிகளையும் ஆராய்ந்து அறியும் ஆற்றல் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெரியார் தன்னை ஒரு நாசக்காரனென்றும் அனைத்து பழைமைவாத வகுப்புவாத கோட்டைகளையும் தகர்ப்பதே தனது தலையாய கடமையென்று அறிவித்த தனது இறுதி மூச்சுவரை அவற்றை செயல்படுத்தினார் என்றார்.

பெண் விடுதலைக்காக...

பெண் விடுதலைக்காக பாடுபட்டவர்களில் முதன்மை யானவர்  பெரியார் என்றும் பெண்கள் தங்களின் விடுதலைக்கு ஆண்களை சார்ந்திருப்பது மான் நரியை நம்புவது போன்ற தென்றார். பெண்களே தங்களின் விடுதலையை தீர்மானிக்க வேண்டும் என்றும், பெண்ணடிமையில் இருந்து விடுபட பெண்கள் தங்கள் நடை, உடை, பாவனை, மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட வேண்டுமென்றும், அடிப்படையில் வெந்து கிடப்பதும், ஆண் மேலாதிக்கத்தை ஏற்று அடங்கிக் கிடப் பதும் ஆண்களின் ஆசைக்கு அடிபணிந்து குழந்தை பெறும் இயந்திரமாகவும் இருக்க கூடாது என்றும் திருமணம் என்பது சடங்கு சம்பிரதாயம் நிறைந்ததாக இல்லாமல் இரு மனங்கள் கலந்த சீர்திருத்த திருமணங்களாக அமைய வேண்டும் என்றும் கூறினார்.

கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகிற்கு ஈடுகொடுப்பதாக அமைய வேண்டும் என்றும் கல்வியை ஆண், பெண் இரு பாலரும் கற்க வேண்டும், பெண்களை இழிவுபடுதும் பகுதிகளை நீக்க வேண்டும் என்று கூறினார்.

ஜி.டி.சாரய்யா உரை

பிரஜா நாத்திக சமாஜம் நிறுவன தலைவர் ஜி.டி.சாரய்யா கூறுகையில்,

தற்போதைய அரசு இந்து மேலாதிக்க மதவாத அரசாக இருப்பதால் நாட்டின் ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், அமைதி, பெண்ணுரிமை, சமய நல்லிணக்கம் போன்றவை சிதைந்து வர்ணாசிரம தர்மத்தை புகுத்தி மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள் என்றும், அரசு, கல்வி, பல்கலைக்கழகங்கள், உணவு நம்பிக்கைகள், சமயம், சட்டம் மற்றும் நீதித்துறை முதலியவற்றை ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவக் கொள்கைகளை திணிக்கின்றனர் என்றும், மக்களை மத்தியயுக காலத்திற்கு அழைத்து செல் கின்றனர் என்றும் கூறினார்.

பேச்சு சுதந்திரம், முற்போக்கு சிந்தனைகளை, பகுத்தறி வாளர்களையும் கொலைக் கும்பலை கொண்டு அழிக்கிறார்கள் என்று கூறினார். மத, இன, மொழி, பிராந்திய வேறுபாடுகள் வளர்ந்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்றும் இதனை எதிர்கொள்ள பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை மிகச் சிறந்த வழி என்றும், இதனை துவக்கத்திலேயே சிதைக்காவிட்டால் நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றும் கூறினார்.

இக்கூட்டத்தில் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கலந்து கொண்டு பெரியாருக்கு புகழ் மாலை சூட்டினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner