எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜன.21 எல்லையில் இந்திய கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதை அடுத்து அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன் விடுத்தது.

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ் தான் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லை நிலைகளை குறிவைத்த போது இந்திய ராணுவம் அதிர டியை காட்டியது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு நேரிட்டது. இப்போது எல்லைக் கிராம மக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்கு தலை தொடங்கி உள்ளது. ஜம்மு மாவட்டத்தின் ஆர்னியா, ஆர்.எஸ்.புரா செக்டார்கள், சம்பா மாவட்டத்தின் ராம்கர் மற்றும் கதுவா மாவட்டத்தின் ஹிராநகர் போன்ற செக்டார்களில் அதி காலையில் இருந்தே பாகிஸ்தான் வீரர்கள் கிராமங்களை குறி வைத்து தாக்குதலை தொடங்கி உள்ளனர். இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ் தான் ராணுவம் மீண்டும் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் உள்பட 3 பேர் பலியானார்கள். 14 பேர் காயமடைந்தனர். இது தொடர் பாக பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

சர்வதேச எல்லையில் கிராமப்பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் அரங்கேறிய தால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பதற்றத்துக்கு உள்ளா கினர். கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை இந்த பள்ளிகள் மற்றும் அரசு கட்டடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக் கைகள் தொடங்கி உள்ளன. கிராமங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள் ளது.   காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் இந்த காட்டுமிராண்டித் தனமான செயல்களுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறு கையில், காஷ்மீரில் முன் எப்போதும் இல்லாத வகையில் தாக்குதல் நடத்தி உயிரிழப்பு மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்தி வரும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை நாங்கள் வன் மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார். மெந்தார் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொது மக்களில் ஒருவர் உயிரிழந்தார் என இப்போது வெளியான தகவல் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் கிராமங்களில் பொதுமக்களை குறிவைத்து காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்திய வெளியுறவுத் துறை பாகிஸ்தான் தூதர் செயத் கைதர் ஷாவிற்கு சம்மன் விடுத்து கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. பாகிஸ்தான் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்து வதற்கு கடும் கவலையை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடு மனித நேய விதிமுறைகளுக்கு எதிரா னது என இந்தியா தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner