எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போபால், ஜன.22 மத்தியப் பிரதேசம் மாநிலம், குனா மாவட்டத்தில் உள்ள ரகோகர் தொகுதியின் 24 வார்டுகளுக்கு கடந்த புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரசு உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட் டன. 66 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதி காரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ரகோகர் தொகுதியில் பதிவான வாக்கு களை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.   முதலில் இருந்தே காங்கிரசு முன்னிலை பெற்று வந்தது. இறுதியில், மொத்தம் உள்ள 24 வார்டுகளில் காங்கிரசு 20 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பா.ஜ.க. மீதமுள்ள 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2003ஆ-ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரசு கட்சி இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner