எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரு, ஜன. 28-   பகுத் தறிவுவாதி, முற்போக்கு எழுத்தாளர், கவுரிலங்கேஷ் கடந்த அக்டோபர் அய்ந்தாம் தேதி இந்துத்துவ அமைப்பினரால் துப்பாக்கி யால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மறைந்து 4 மாதங்கள் கழிந்த நிலையில் திங்களன்று (29.1.2018) அவரது பிறந்தநாள் விழா பெங்களூருவில் “கவுரி நாள்” என்ற பெயரில் மறைந்த கவுரிலங்கேஷ் அவர்களுக்கு நினைவு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

இந்த விழாவில் குஜராத்தில் புதிய புரட்சியை உருவாக்கிய சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார், இந்திய மாணவர் அமைப்பின் செயலாளர் ஷியா ரஷித், உமர் காலித், மற்றும் கவுரிலங்கேஷ் உறவினர்கள் ஒன்று கூட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி னராக அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 50 ஆண் டுகளாக இருந்த வந்த இந்துத் துவ அமைப்புகளின் ஆதிக் கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மாணவர் தலைவில் ரிச்சா சிங், ரோகித் வெமுலா வின் தாயார் ராதிகா வெமுலா, முற் போக்கு எழுத்தாளர் தீஸ்தா செதல்வாத், மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் பெங்க ளூருவைச் சேர்ந்த பறையிசைக் குழுவின் இசையோடு ஆரம்பிக்க உள்ளது, அதனைத் தொடர்ந்து புனே வைச் சேர்ந்த புரட்சிகர பாடல் அமைப் பான கபிர் கலா மஞ்ச் பாடலரங்கம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கவுரி லங்கேஷ் எழுத்துக்களின் தொகுப்பு மற்றும் அவரது கவிதைத் தொகுப் புகள் அடங்கிய இரண்டு நூல்கள் வெளியிடப்படுகின்றன. மேலும் கவுரிலங்கேஷ் குறித்து மக்கள் கருத்துக்கள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பும் வெளியிடப்படுகிறது.   பெங்களூரு டவுன்ஹால் மன்றத்தில் நடைபெறும் இந்த விழாவில் மதச்சார் பின்மை, சமத்துவம், ஒற்றுமையான சமூகத்தைத் தட்டியெழுப்பும் வகை யில் அனைவரும் ஒன் றாக இணைவோம் என்று கவுரி லங்கேஷ் நினைவு அறக்கட் டளை அமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கவுரி லங்கே ஷின் நினைவாக புதிய பகுத்தறிவு வார இதழ் அன்றைய தினத்தில் இருந்து துவங்கப்பட உள்ளது. இது குறித்து கவுரிலங்கேஷ் அறக்கட்டளை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் பகுத்தறிவு வார இதழை மறைந்த கவுரி லங்கேஷ் அவர்கள் நடத்தி வந்தார். அவரது மறைவை ஒட்டி அந்த இதழ் நின்றுவிடும் என்று பலர் கனவு கண்டனர், ஆனால் கவுரி லங்கேஷ் நடத்தி வந்த இதழோடு மற்றோரு புதிய இதழுடன், பகுத்தறிவு நாளிதழ் ஒன்றையும் கொண்டு வர முடிவெடுத்துள்ளோம்.

இதற்கான நிதிதிரட்டும் பணி விரை வில் துவங்க உள்ளோம் என்று அந்த இதழில் என்று கூறப்பட்டுள்ளது.