எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஜன.29  புதுவை மாநில காங்கிரசு கட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் நாரா யணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இலங்கை கடற்படை தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடிப் பதாக கூறி கைது செய்து அவர்களது படகுகளை பறிமுதல் செய்து வருவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மத்தியில் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இலங்கை கடற்படையினர் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை அதிகளவில் கைது செய்துள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை. குற்றம் சாட்டினார்.

அண்டை நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் எல்லைதாண்டி மீன்பிடித்தால் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி உள்ளது. தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய இந்த சட்டத்தை மறு பரிசீலனை செய்ய இலங்கை அரசை பிரதமர் மோடி வலியுறுத்த கோரி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால் சர்வதேச அளவில் இந்த பிரச்சினையை மத்திய அரசு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.