எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமராவதி, மார்ச் 14 தென் மாநிலங்களிடம் இருந்து பெறப்படும் வரி வருவாயை கொண்டு வடமாநிலங்களை மட்டும் மத்திய பாஜக அரசு வளப்படுத்துக்கிறது என அதிரடி குற்றம்சாட்டியுள்ளார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆந்திரா சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி என எதுவும் இல்லை. அனைத்தும் மக்களின் பணம்.

தென் மாநிலங்கள்தான் மத்திய அரசுக்கு பெரும் நிதியை வரி வருவாயாக கொடுக்கின்றன. ஆனால் இந்த வரி வருவாயின் பெரும்பகுதி வட மாநிலங்களின் வளர்ச்சிக் குத்தான் பயன்படுத்தப்படு கிறது. ஏன் இந்த பாகுபாடு?

ஆந்திரா மாநிலம் இந்த நாட்டின் அங்கம் இல்லையா? ஏன் எங்களது வரி வருவாயை வடக்கு, கிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு கொடுக்கிறீர்கள்? ஏன் அந்த நிதியை  எங்களுக்கு தர மறுக்கிறீர்கள்?

தேசிய கொள்கை வகுப்பு அகாடமி, தேசிய உயிரியல் ஆய்வு மய்யங்களை ஏன் ஆந் திராவில் அமைக்கவில்லை? ஆந்திராவுக்கு சிறப்பு அந் தஸ்து தர முடியாது என நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருப்பது கெட்ட வாய்ப்பா காது.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கியது மத்திய அரசு. அப்படியானால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆந்திராவுக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து தர மறுக்கிறது மத்திய அரசு? ஆந்திரா மாநிலம் பிரிக்கப் பட்ட போது மத்திய அரசு அளித்த உறுதிமொழியைத் தானே நிறைவேற்றுமாறு கோருகிறோம். அதற்கு அப்பால் நாங்கள் எதையும் கேட்கவில்லையே? இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner