எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச் 27 காங்கிரசு இல்லாமல் பாஜக வுக்கு எதிரான கூட்டணியை அமைப்பது சாத்தியமாகாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டில்லியில் அவர் பிடிஅய் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திரிணமூல் காங்கிரசு தலைவர் மம்தா பானர்ஜி போன்றோருடன் இணைந்து தேசிய அளவில் கூட்டணி அமைக்கப்படும் என யாரேனும் தெரிவிக்கலாம். ஆனால், காங்கிரசு இல்லாமல் இந்த அணியை ஏற் படுத்த வேண்டும் எனில், அது நிச்சயம் சாத்தியமாகாது. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மக்களவை இடைத் தேர்தலில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் ஏன் காங்கிரசு கூட்டணி சேரவில்லை எனக் கேட்கிறீர்கள். அந்தத் தேர்தலின் முக்கிய செய்தியே, ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்தால், பாஜகவை வரும் தேர்தல்களில் தோற்கடிக்க முடியும் என்பதுதான். அந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜவாதி இடையே கூட்டணி ஏற்படும் என யாரும் எதிர் பார்த்திருக்க முடியாது. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜவாதி தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஓரணியில் வருவர் என நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், அதுபோல் கூட்டணி அமைந்தது. தலித்துகள், யாதவ் சமூகத்தினர், இடைத் தேர்தலில் ஒன்றாக இணைந்து செயல்பட்டனர். இதுதான் தேர்தல் வெற்றிக்கான திட்டமாகும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேர்தல் வெற்றிக்கு என தனித்திட்டம் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை எடுத்துக் கொண்டால், தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் இணைந்து போட் டியிட்டு, சிவசேனையும், பாஜகவும் தனித்தனியாக போட்டியிட்டால், எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும். தொடர் தோல்விகளால் காங்கிரசின் செல் வாக்கு குறைந்து விட்டதாக கூற முடியாது. பல மாநிலங்களில் காங்கிரசு கட்சியின் செல்வாக்கு இன்னமும் அப்படியேதான் உள்ளது. பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசு கட்சி செல் வாக்கான கட்சியாகத்தான் திகழ்கிறது. நாடு முழுவதும் பரவலாக பாஜகவை எதிர்க்கக் கூடிய கட்சி என கருதினால், அது காங்கிரசு கட்சியாகத்தான் இருக்க முடியும் என்றார் பிருத்விராஜ் சவாண்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner