எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கொல்கத்தா, மார்ச் 28 ராமநவமி எனும் பெயரால் ஊர்வலங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

பாஜகவினரின் ராமநவமி ஊர்வலங் களில் நீண்ட வாள் போன்ற கொடிய ஆயுதங்களை ஏந்தி, கூச்சல் போட்டபடி செல்கிறார்கள். அதனால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினரின் ஆயுதங்களுடன் கூடிய ஊர்வலங்களால் சமூக அமைதி கேள்விக்குறியாக்கப்பட் டுள்ளது.

மேற்கு வங்க மாநில அரசு விதித்த தடையை மீறி, பாஜகவினரும், சங் பரி வார் அமைப்பினரும் இணைந்து ராம நவமி ஊர்வலங்களில் ஆயுதங்களுடன் சென்றனர். மேலும், அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினரையும் தாக்கி யுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் சார்பிலும்  ராமநவமி ஊர்வலங்கள் நடக்கின்றன. ஆனால், பாஜக, சங்பரிவார அமைப்புகள் ஆயுதங்களுடன் ராமநவமி ஊர்வலங்கள் செல்வதை மாநில அரசு தடை செய்துள்ளது.

மக்கள் நலனைச்சார்ந்த பிரச்சினை களுக்காக அரசியல்ரீதியிலாக போராட்டங் களை செய்ய முன்வராத பாஜக, சங் பரிவார அமைப்புகள் மதத்தைக் கையி லெடுத்துக்கொண்டு, வன்முறை வெறியாட் டங்களை அரங்கேற்றி வருகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கு 24 பர்கானாஸ் பகுதிகளில் நடைபெற்ற ஆயுத மேந்திய ஊர்வலங்கள் இரண்டு இடங் களில் தடையை மீறி நடைபெற்றதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

புரூலியா மாவட்டத்தில் உயிரிழப்பு

புரூலியா மாவட்டத்தில் ஆர்ஷா காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியான முசுலீம்கள் அதிக அளவில் வசிக்கின்ற பேல்டி கிராமத்தில் ஆயுதமேந்தி ராமநவமி ஊர்வலத்தில் இந்துத்துவ அமைப்பினர் கலந்துகொண்டு வன்முறைகளில் ஈடு பட்டனர். பஜ்ரங் தளம் அமைப்பினர் காவல் துறையினருக்கு எதிராக ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர். அவ்வன்முறையில் சிக்கிக்கொண்ட ஷேக் ஷாஜகான் (வயது 50) என்பவர் கொல்லப்பட்டார்.

தடையை மீறி, நீண்ட கத்தி போன்ற ஆயுதங்களுடன் ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, காவல்துறையினருக்கும், சங் பரிவார அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. புரூலியா மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் ஜோய் பிஸ்வாஸ் கூறியதாவது: காவல்துறையின் முதற் கட்ட விசார ணையில் வன்முறையில் ஷேக் ஷாஜகான் எனும் 50 வயது முதியவர் சிக்கிக்கொண்டு, வன்முறையாளர்களால் தடிகளால் சரமாரி யாகத் தாக்கப்பட்டார். படுகாய மடைந்த படுகாயமடைந்தார். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே இறந்துவிட்டார். இது தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பேல்டி பகுதியில் நிலைமை மிகவும் மோச மானதால் கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட் டனர் என்று கூறினார்.

சட்டம் ஒழுங்கு பிரிவு ஏடிஜி அனுஜ் சர்மா கூறுகையில், ஊர்வலத்தில் வன் முறையில் ஒருவர் உயிரிழந்தார் என்கிற தகவல் பரவியதை அடுத்து, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுப்ரதா பால் மற்றும் காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினரைத் தாக்கினார்கள். அதனால், துணைக் கண்காணிப்பாளர் உள்பட காவல்துறையினர் 5 பேர் படுகாய மடைந்ததால், மேல்சிகிச்சைக்கு எஸ்எஸ் கேஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார்.

பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் - வன்முறைப் பேச்சு

மேற்கு வங்க மாநில அரசு பாஜக மற்றும் சங் பரிவார அமைப்பினரின் ஆயுதமேந்திய ஊர்வலத்துக்கு தடைவிதித்ததையடுத்து, கட்சியின் முடிவை வெளியிட்டு, முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:

வாள்கள், திரிசூலங்கள், தண்டாயுதங் களுடன் மாநிலம் முழுவதும் ஊர்வலத்தை நடத்துவோம். நம்மை யார் தடுக்க முயன் றாலும் அது தொல்லைதான். ஆயுதங்களை ஏந்திச் செல்வது பழைமையான பழக்க மாகும். அதை நாம் தொடர்ந்து செய்வோம். ராமர் கோயில் விரைவில் உருவாகும் என்றார். அவர் கூறியபடி, மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் அவருடைய சட்டப் பேரவைத் தொகுதியான காரக்பூரில் நடை பெற்ற ராமநவமி ஊர்வலத்தில் நீண்ட வாளுடன் கலந்துகொண்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner