எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஏப். 2- உத்தரப் பிர தேசம் மாநிலத்தில் ஓராண் டில் காவல்துறையினர் நடத் திய 1100 என்கவுண்டர்களில் 49 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமை யில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி அவர் உத்தரப் பிரதேச முதல் வர் பொறுப்பை ஏற்றார்.

பதவிக்கு வந்ததும் அவர் போட்ட முதல் உத்தரவே, சட்டம்-ஒழுங்கை பேண கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்பதுதான். இதை யடுத்து உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடிகள் அனைவரும் வேட்டையாடப்பட்டனர்.

ரவுடிகளை ஒடுக்க, தேவைக்கு ஏற்ப என்கவுண்டர் நடத்தலாம் என்று யோகி ஆதித்யநாத் காவல்துறையின ருக்கு அதிகாரம் வழங்கினார். அதை பயன்படுத்தி உத்தரபிர தேச காவல்துறையினர் அடிக் கடி என்கவுண்டர் நடத்தினார் கள்.

உத்தரபிரதேச காவல்துறையினரின் இந்த என்கவுண்டர் அதிரடி வேட்டை தற்போது ஓராண்டை நிறைவு செய்துள் ளது. 2011ஆ-ம் ஆண்டு மார்ச் முதல் 2018ஆ-ம் ஆண்டு மார்ச் வரை ஓராண்டில் உத்தரப் பிர தேசத்தில் எத்தனை என் கவுண்டர்கள் நடந்தன என்று ஆய்வு செய்யப்பட்டது.

அதில் 1100 தடவை காவல்துறையினர் என்கவுண் டர்கள் நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகர் லக்னோ மாவட்டத்தில்தான் அதிக என்கவுண்டர்கள் நடந் துள்ளன. மீரட், ஷம்லி, முசா பர்நகர், பக்பத், சகரன் பூர், பலந்த்சாகர், காசியாபாத், நொய்டா மாவட்டங்களிலும் என்கவுண்டர்கள் மூலம் ரவுடிகள், சமூக விரோதிகள் வேட்டையாடப்பட்டனர்.

இந்த என்கவுண்டர்களில் 49 பேர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். 370 பேர் காயங் களுடன் தப்பினார்கள். காவல் துறையினருடன் என்கவுண் டர்களில் ஈடுபட்டதாக 3,300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிழக்கு உத்தரப்பிர தேசத் தில் அசம்கர் பகுதியில் பிர பல சமூக விரோதிகள் 5 பேர் காவல்துறையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது மிக முக்கிய மான என்கவுண்டராக கருதப் படுகிறது. அந்த வேட்டையில் 5 காவல்துறையினரும் பலி யானார்கள். 200 பேர் காயம் அடைந்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த என்கவுண்டர்களுக்கு தேசிய மனித உரிமை ஆணை யமும், மாநில மனித உரிமை ஆணையமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 4 என்கவுண்டர் களை காவல்துறையினர் போலி யாக நடத்தியதாக மாநில மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகளும் உத்தரபிரதேசத் தில் போலி என்கவுண்டர்கள் நடப்பதாக குற்றம் சாட்டி யுள்ளன. என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டவர்க ளில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள், தலித்துகள் என்றும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner