எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போபால், ஏப். 3- -தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் 20.3.2018 அன்று அளித்த தீர்ப்பு தலித் மக்களை கொந்தளிக்க வைத்து உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உடனடியாக மறுசீராய்வு மனு வைத் தாக்கல் செய்ய வேண்டும்; தலித்துக்கள் மற்றும் பழங்குடியினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆவேசமிக்க போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

அதனொரு பகுதியாக, திங்கட் கிழமை யன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த தலித் அமைப்பினர், சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங் களையும் நடத்தினர். இப்போராட்டங்களால் உத்தரப்பிர தேசம், பீகார், ராஜஸ்தான், டில்லி ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

தலித் மக்களின் எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாத, மத்தியப் பிரதேச மாநில பாஜக அரசு, தனதுகாவல்துறை மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி தலித்துக்கள் 7 பேரை படுகொலை செய்துள்ளது. மேலும், பல இடங்களில் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களில் ஒன்றான பஜ்ரங்-தள் அமைப்பைச் சேர்ந்த குண்டர்களும் தலித் மக்கள் மீது கொடூர மான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள் ளனர்.

எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைத் தடுப் புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கடந்த மார்ச் 20-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம், எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்கள் மீது யார்மீதும் உடனடியாக கைது நட வடிக்கை எடுக்கக் கூடாது; தீவிர விசார ணைக்குபின்பே கைது செய்ய வேண்டும்; அதேபோல, அரசு ஊழியர்களையும் உடனடி யாக கைது செய்யக்கூடாது. உயர் அதிகாரி களின் அனுமதி பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும் உன்று உத்தரவு பிறப் பித்தது. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மானது, தலித் மக்களின் பாதுகாப்புக்காக விஷேசமாக உருவாக்கப்பட்டது என்பதை உணராமல் நீதிபதி ஏ.கே. கோயல் மற்றும் யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய சட்ட அமர்வு இந்த தீர்ப்பை அளித்தது. இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எஸ்.சி.,எஸ்.டி., மக்களுக்கு அரசியல மைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறப்பு உரி மைகளைப் பறிக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, எதிர்காலத்தில் தலித் மக்களுக்கு எதி ரான வன்முறை அதிகரிப்பதற்கும் காரண மாகி விடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் கண்டனம் தெரி வித்தன. உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத் திய அரசுக்கும் கோரிக்கை விடுத்தன. இந் நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப் புக்கு எதிராக வடமாநிலங்களில் உள்ள தலித் அமைப்பு கள், திங்கட்கிழமையன்று பொது வேலை நிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்தன. தலித்ஒடுக்குமுறை விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புக்கள் இதில் கலந்து கொண்டன. போராட்டத்தின் போது, வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான தலித் மக்கள் சாலைகளையும் ரயில்களையும் மறித்து தங்களின் எதிர்ப்பைக் காட்டினர். மேற்கு வங்கம்

மேற்குவங்க மாநிலத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும்- தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி உள்ளிட்ட தலித் அமைப்பினர் பேரணி நடத் தினர். அத்துடன் கொல்கத்தாவில் உள்ள தேசிய மனித உரிமை ஆணைய அலுவலகத் தில் பஸ்கிம் பங்கா சமாஜக் நியாய மன்ச் அமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தெலங்கானா

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் நடைபெற்ற பேரணியில், தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி அகில இந்திய செய லாளர் சீனிவாசராவ் கலந்து கொண்டார்.

குஜராத்

குஜராத்தின் வதோதரா நகரில் ரயில் மறியல் நடைபெற்றது.  உத்தரப்பிரதேசத்தில் காஜியாபாத், மீரட், ஆக்ராவில் ரயில் மறி யல் போராட்டங்கள் நடைபெற்றன. டில்லி

டில்லி - ஜான்சி ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

பீகார்

பீகார் மாநிலத்தில் பல்வேறு இடங்க ளில் சாலை மறியலும், ரயில் மறியலும் நட ந்தன. எஸ்.சி.,எஸ்.டி., சட்டத்தில் வழங்கப் பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக அவச ரச்சட்டம் இயற்ற வேண்டும் என வலி யுறுத்தி பீகார் சட்டப்பேரவையில் ரா ஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ தேஜஸ்வி யாதவ் தீர் மானம் கொண்டு வந்தார். தார்பங்கா, கயா, ஜெகானாபாத், பெகு சாரி, போஜ்பூரி, அரா ரியா ஆகிய இடங்க ளில் ரயில் மறியலும், சாலை மறியலும் நடந்தது. நவாடா, புரே னியா, தார்பங்கா உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடை பெற்றது.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் நடந்த போராட்டத்தி ன்போது 50-க்கும் மேற்பட்டவர்களை அம் மாநில பாஜக காவல்துறை கைது செய்தது. பல்வேறு இடங்களில் சாலை மறியல், கடை யடைப்பு, ரயில் மறியல்கள் நடந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டது. கைர்தால் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், புது டில்லி -அஜ்மீர் சதாப்தி எக்ஸ்பிரஸ், பிவானி -ஆல்வார் ரயில் ஆகியவை மறிக் கப்பட்டன. ஆல்வார் ரயில் நிலையத்தில் சுராத்கர் -ஜெய்பூர் பயணிகள் எக்ஸ்பிரஸ், அலகாபாத்- ஜெய்பூர் எக்ஸ்பிரஸ், டில்லி- போர்பந்தர், பாந்த்ரா-தில்லி, அகமதாபாத்-வைஷ்ணவதேவி எக்ஸ்பிரஸ் ஆகியவையும் நிறுத்தப்பட்டன. ராஜஸ்தான் மாநிலத்தில் பல நகரங்களில் சாலை மறியல் காரணமாக பேருந்துப் போக்குவரத்து முடங்கியது.

தலித் மக்களின் போராட்டத்தால் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ் தான், டில்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகள், ஸ்தம்பித்த நிலையில், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ் தான் மாநில பாஜக அரசுகளானது, காவல் துறையை ஏவி, தலித் மக்களின் போராட் டத்தை ஒடுக்க முயன்றதுடன், பஜ்ரங் தள் குண்டர்களும் தலித் மக்கள் மீது கொடூர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத் தவே, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

ம.பி.

மத்தியப் பிரதேசத்தின் பிண்ட் பகுதி யில் பஜ்ரங் தள் மற்றும் பீம் சேனாவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.  அப்போது பஜ்ரங் தள் அமைப்பினர் பொதுச் சொத்துக்க ளுக்கு தீவைத்தனர். இதனால், குவாலியரில் 6 காவல் நிலையஎல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த காவல்துறையினர், முரைனா மற்றும் பிண்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தாடீபூர் பகுதியில் தலித்துக்கள் இரு வர் உயிரிழந்தனர். பிண்ட் பகுதியில் ஒருவர் உயிரிழந்தார். ஜபல்பூர், இந்தூர் ஆகிய நகரங்களில் தடியடியும் நடத்தப்பட்டது. உத் தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர், ஹாபுட் மற்றும் ஆஜம்கட்டில் நிகழ்ந்த வன்முறையில் கடைகள், வாகனங்கள் தீவைத்துக் கொளுத் தப்பட்டன. மீரட்டில் புறக்காவல் நிலையத் திற்கு தீவைக்கப்பட்டது. ஆக்ராவில் தலித் துக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத் தினர். முசாபர் நகர் சாலையில் பயணி கள் பேருந்து ஒன்று தீவைக்கப்பட்டது.

சீராய்வு மனு தாக்கல்

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங் கிய தீர்ப்புக்கு எதிராக திங்கட்கிழமையன்று மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்து உள்ளது. அந்த மனுவில், எஸ்சி,எஸ்டி வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனிநபர்க ளையும், அரசு ஊழியர்களையும் உடனடி யாக கைது செய்யக்கூடாது என்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு என்பது அரசியல மைப்புச் சட்டம் பிரிவு 21 வழங்கிய உரி மைக்கு விரோதமானதாகும். அரசியலமைப் புச் சட்டம் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினருக்கு வழங்கிய சிறப்புரிமைகளை இந்த தீர்ப்பு நீர்த்துப்போகச் செய்யும். எதிர்காலத்தில் தலித்மக்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தத் தீர்ப்பினால் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, ஏற்கெனவே இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று மனுவில் குறிப் பிட்டுள்ளது.

உடனடி விசாரணைக்கு மறுப்பு

இந்த மனுவை உடனடியாக விசார ணைக்கு ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner